“நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே”1 |
(நெடுநல்-186-8) |
எனவும், |
“ஒருகை பள்ளியொற்றி யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து”2 |
(முல்லை-75-6) |
எனவும் வருவனவற்றான் அரிதாக உஞற்றியவாறு காண்க3. |
இனிக் காவற்பிரிவுக்கு4 முறை செய்து காப்பாற்றுதலை எண்ணுமெனப் பொருளுரைக்க. |
சிவ. |
இச் சூத்திரம் மகளிரொடு பாசறைப் பிரிவு இல்லை என்கின்றது. |
இ-ள். எண்ணுதற்கரிய பாசறையிடத்து மகளிரொடு செல்லமாட்டார் என்றவாறு. |
இளம்பூரணர் எண்ணரும் பாசறை என்பதற்கு, “மாற்றாரை வெல்லுதல் கருத்து மேற்கோடலிற் றலைமகளிரை நினைத்தற்கரிதாய பாசறை” எனப் பொருள் கூறுவர். |
மகளிரை நினைத்தற்கரிய பாசறை என்பதனாலேயே மகளிரொடு சேறல் இல்லை என்பது பெறப்படுமாதலின் மீளவும் |
1 பொருள் : “நள் என்னும் ஒலியுடைய நடு இரவிலும் துயில் கொள்ளானாய்த் தனக்குரிய காவல் துணைவர் சிலருடன் சுற்றிவரும் வேந்தனுடைய பல வேந்தரொடு பகை கொண்டு போர்புரிதற்குரிய பாசறையில் செய்யும் தொழில்”. இதில் பாசறையில் வேந்தன் போரையே எண்ணும் நிலை கூறப்பட்டது. |
2 பொருள் : “ஒருகை படுக்கையைப் பற்றியிருக்க ஒரு கையை தன் தலையில் கைக்கடகம் சேரப்படுத்து வெற்றி குறித்து நீண்டநேரம் நினைந்து”-இதிலும் பாசறையில் வெற்றி குறித்து எண்ணுதல் கூறப்பட்டது. |
3 அரிதாக உஞற்றியவாறு-அரிதாக எண்ணிச் செயலாற்றியவாறு. |
4 காவற்பிரிவு- நாடுகாத்தற்குப் பிரியும் பிரிவு. |