266தொல்காப்பியம் - உரைவளம்
 

காமஇழிநிலையை     ஏதுக்காட்டிக்கூறுதல்   என்றுகூற  வெள்ளைவாரணனார்  தலைவன்   ஊர்ந்துவரும்
தேரின் நிலையைக் கூறுதல் என்றார். தலைவனின் செலவு பற்றிக் கூறுவதுபோல  வரவு  பற்றியும்  கூறுதல்
உண்டு என்பது சிறக்கும் ஆதலின் வெள்ளை வாரணனார் கூறியது சாலப் பொருந்தும்.
  

வாயில்களின் கூற்று
  

176.

எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. 

(37)
 

இளம்
  

இது, வாயில்கட் குள்ளதோர் மரபு உணர்த்திற்று.
  

இ-ள்  :   வாயில்கள்   எல்லாம்   இருவர்  மாட்டும்  பொருந்திய  மகிழ்ச்சிப்  பொருண்மையுடைய
என்றவாறு.
  

இருவராவார் தலைவனுந் தலைவியும், எனவே வெகுட்சிப் பொருண்மை கூறப் பெறார் என்றவாறு,
   

நச்
  

இது, வாயில்களின் இலக்கணங் கூறுகின்றது.
  

இ-ள்:  எல்லாவாயிலும்- பார்ப்பான் முதலிய வாயில்களெல்லாம். இருவர்  தேஎத்தும் புல்லிய-தலைவன்
கண்ணுந்தலைவி   கண்ணும்   பொருந்திய,   மகிழ்ச்சிப்  பொருள   என்ப-மனமகிழ்ச்சிப்   பொருளினை
நிகழ்த்துதலைத் தமக்குப் பொருளாகவுடையர் என்றவாறு ,
  

எனவே,    மகிழ்ச்சி கூறப்பெறாராயிற்று. ‘புல்லிய’  என்றதனானே விருந்தும் புதல்வரும் ஆற்றாமையும்
வாயிலாகுப  என்று  கொள்க.  வாயில்கள் ‘தோழி தாயே’ (193) என்பதனுட்  கூறுப.  உதாரணம்  வந்துழிக்
காண்க.
  

சிவ
  

இச்சூத்திரம் வாயில்களின் கூற்றுக்கு உரிய குறிக்கோள் கூறுகின்றது.
  

எல்லா   வாயில்களும்   தலைவன்   தலைவியரிடையே   பொருந்திய  இன்பத்தையே   அடிப்படைப்
பொருளாகக் கொண்டு நிற்கும் என்பர்.