அதாவது இருவரிடையும் இன்பம் சிறக்கவேண்டும் என்னும் கருத்தையே அடிப்படையாகக் கொண்டு வாயில்கள் கூற்று நிகழ்த்துவர் என்பதாம். |
வாயில்களின் மகிழ்ச்சிப் பொருளாவது இன்பத்தைக் குறிக்கோளாகக் கொண்ட பொருள். பாங்கன் கழறல், தோழியின் சேட்படை மறுத்துரை, இயற்பழித்தல் முதலிய யாவும் மகிழ்ச்சிப் பொருளனவேயாகும். அடுத்த சூத்திரத்து வரும் அன்புதலைப் பிரிந்த கூற்றும் மகிழ்ச்சிப் பொருளையே கொண்டதாகும். அன்பு தலைப் பிரிந்த கிளவி என வருவதற்கு அன்பு தலைப் பிரிவது போல காணப்படும் கிளவி என்றே கொள்ளல் வேண்டும். எனவே வாயில்கள் கூற்று மகிழ்ச்சியையே குறிக்கோளாகக் கொள்ளும் எனக் கொள்க. |
“மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே” |
(41) |
என்னும் சூத்திரத்துப் பாங்கன் தலைவனின் மொழிக்கு எதிர்மொழி கூறுமிடத்தும் மகிழ்ச்சிப் பொருளே குறிக்கோளாகும் என்க. |
புறனடை |
177. | அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின் சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர். | (38) |
|
இளம். |
இது மேலதற்கோர் புறனடை. |
இ-ள் : வாயில்கண் மகிழ்ச்சிப் பொருண்மை கூறுதலின்றி அன்பு நீங்கிய கிளவி கூறினாராயின் தலைவன் சிறைப்புறத்தானாகப் பெறுவர் எனச் சொல்லுவர் என்றவாறு. |
இதுவும் ஓர் இலக்கணம் கூறியவாறு. |
நச். |
இது, மகிழ்ச்சிப் பொருளன்றி வாயில்கள் இவ்வாறுங் கூறப்பெறுவரென்றலின் எய்திய திகந்துபடாமற் காத்தது. |