இ-ள் : அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றில்-அன்பு இருவரிடத்தும் நீங்கிய கடுஞ்சொல் அவ்வாயில் களிடத்துத் தோன்றுமாகில், சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர். ஒருவர்க்கொருவர் சிறைப்புறத்தாராகக் கூறல் வேண்டுமென்று கூறுவற் புலவர் என்றவாறு. |
‘தோன்றின்’ என்பது படைத்துக் கொண்டு கூறுவரென்பதாமாகலின் ‘குறித்தன்று’ என்பது ‘போயின்று’ என்பது போலறகரம் ஊர்ந்த குற்றியலுகரம். ‘அறியாமையின்’ என்னும் (50) நற்றிணைப் பாட்டும் உதாரணமாம். அது சிறைப்புறமாகவுங் கொள்ளக்கிடந்தமையின். |
சிவ. |
இச்சூத்திரம் தலைவியின் தற்புகழ்ச்சிக்கு இடம் கூறுகின்றது. |
இ-ள் : தலைவிக்குத் தலைவன் முன்னர்த் தன்னைப் புகழ்ந்து கூறும் கூற்று எவ்விடத்து நிலையிலும் இல்லை; ஆனால் முன்னே கூறப்பட்ட தலைவன் பரத்தையிற்பிரிந்து வந்தவழி அவன் தன்னை இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டிடத்து மட்டும் தற்புகழ் கிளவி கிழத்திக்கு உண்டு என்றவாறு. |
நச்சினார்க்கினியர், முற்படக்கிளந்த இரண்டு என்பன தாய் போல் கழறித் தழீஇக் கோடல் என்பதும் அவன் சோர்பு காத்தற்கு மகன்தாய் உயர்பு தன் உயர்பாகும் என்பதும் ஆகியன என்றார். தாய்போற் கழறித் தழீஇக் கோடல் என்பதற்கு அவர் கூறிய |
“பரத்தையிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தினள் எனக் கொள்ளுமாற்றான் மேல்நின்று மெய்கூறும் கேளிராகிய தாயரைப் போலக் கழறி அவன் மனக் கவலையை மாற்றிப் பண்டுபோல் மனங் கோடல்” |
எனும் உரைக்கு ஏற்பத் தலைவி தற்புகழ் கிளவி பொருந்துவதாகும். ஆனால் அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் “மகன்தாய் உயர்பும் தன் உயர்பாகும்” என்பதற்கு அவர் கூறிய |
“தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தால் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக்குக் |