தலைவன் தற்புகழ்ச்சி |
179. | கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன் வினைவயின் உரிய என்ப. | (40) |
|
இளம். |
இது, தலைவற்குரியதோர் மரபுணர்த்திற்று. |
இ-ள் : தலைவி முன்னர்த் தலைவன் றன்னைப் புகழுங்கூற்று, வினைவயிற் பிரியும் வழியுரிய என்றவாறு. |
“இல்லென இரந்தோர்க் கொன்றீயாமை இழிவு” |
(கலித்-2) |
என்றும் |
“இல்லிருந்து மகிவோர்க் கில்லையால் புகழ்” |
என்று கூறுதல். இவ்வாறு கூறலே ‘யான் செய்யேன்’1 |
எனத் தன்னைப் புகழ்ந்தவாறாம். |
நச். |
இது, தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்கும் இடம் இன்னுழி என்கின்றது. |
இ-ள்: கிழவி முன்னர்க் கிழவோன் தற்புகழ் கிளவி-தலைவி முன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங்கூற்று, வினைவயின் உரிய என்ப-காரியங்களை நிகழ்த்துங்காரணத்திடத்து உரியவென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு. |
அக்காரணமாவன : கல்வியும், கொடையும், பொருள் செயலும் முற்றகப்பட்டோனை முற்று விடுத்தலுமாகிய காரியங்களை நிகழ்த்துவலெனக் கூறுவன. இவ்வாள்வினைச் சிறப்பை யான் எய்துவலெனத் தன்னைப் புகழவே அது பற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று. |
“இல்லென விரந்தோர்க் கொன்றீயாமையிளிவென” |
(கலி-2) |
விரும்பத்தக்க சிறப்பினையுடைய பெண் இயல்பினல் என்றாலும் என்னொடு ஒப்பாவாள் அல்லள். |
1 ஈயாமையைச் செய்யேன், இல்லிருந்து வீணே மகிழ்தலைச் செய்யேன். |