தளைபிணி யவிழாச் சுரிமுகிழ்ப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ நின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குன் மாமழை சேண்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமிய ணீந்தித் தம்மூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து நுதிமுக மழுங்கிய மொண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை நெடுநா வெண்மணி கழிப்பிணிக் கறைத்தோற் பொழிகணை யுதைப்பத் தழங்குரன் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழிந்துறை செறியாவாளுடை யெறுழ்ந் த்தோ னிரவித்துயின் மடிந்ததானை யுரவுச் சினவேந்தன் பாசறையேமே” |
(அகம்-24) |
இதனுட் கணையுதைப்ப முரசொடு மயங்கும் யாமத்துத்துயின் மடிந்து வாளுறை செறியாத் தானையையுடைய வேந்தனெனவே வென்றிக் காலங் கூறியவாறும் கிழவி நிலை உரைத்தவாறுங் காண்க. |
பருவங் கண்டும் தூதுகண்டும் கூறியவை ‘பாசறைப் புலம்பலும்’ (41) என்புழிக் காட்டினாம். |
பூப்புக் காலத்துப் பரத்தையர்ப் பிரிவு |
185. | பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன்று உறையார் என்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான. | (46) |
|
பி.இ.நூ. |
இறை. கள. 43 |
பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே. |
இறை.கள. 43 உரையில் |
பூப்பு முதல் முந்நாள் புணரார் புணரின் |