282தொல்காப்பியம் - உரைவளம்
 

இனிப்     பூப்பின்  முன்னாறுநாளும்,  பின்னாறு  நாளுமென்றும் பூப்புத் தோன்றிய  நாள்  முதலாகப்
பன்னிரண்டு  நாளுமென்றும்  நீத்தல்  தலைவன்  மேல்  ஏற்றியும்   அகறலைத்  தலைவி  மேல்ஏற்றியும்
உரைப்  பாருமுளர்.1  பரத்தையிற்  பிரிந்த  காலத்துண்டான   பூப்பெனவே,   தலைவி   சேடியர்  செய்ய
கோலங்கொண்டு பரத்தையர் மனைக்கட் சென்று தலைவற்குப் பூப்புணர்த்துதலாலுங் கொள்க. இது,
   

“அரத்த முடீஇ யணிபழுப்புப் பூசிச்
சிரத்தையாற் செங்கழுநீர் சூட்டிப்-பரத்தை
நினைநோக்கிக் கூறினு நீமொழிய லென்று
மனைநோக்கி மாண விடும்.”
  

(திணை-நூற்-144)
 

தோழி செவ்வணியணிந்து விட்டமை தலைவன் பாங்காயினார் கூறியது.
  

இக் காலத்தின் கண் வேறுபாடாக வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க.
  

பூப்புப்     புறப்பட்ட  ஞான்றும்  மற்றை நாளுங் கருத்தங்கில் அது வயிற்றில் அழிதலும்,  மூன்றாநாள்
தங்கில்   அது   சில்   வாழ்க்கைத்தாகலும்   பற்றி   முந்நாளுங்   கூட்டமின்றென்றார்.  கூட்டமின்றியும்
நீங்காதிருத்தலிற்  பரத்தையிற் பிரிந்தானெனத் தலைவி  நெஞ்சத்துக் கொண்ட  வருத்தம்  அகலும். அகல
வாய்க்குங்கரு  மாட்சிமைப்படுமாயிற்று.  இது  மகப்பேற்றுக்  காலத்திற்குரிய  நிலைமை கூறிற்று.  இதனாற்
பரத்தையிற்  பிரியுநாள்  ஒருதிங்களிற்   பதினைந்தென்றாராயிற்று.  உதாரணம்  வந்துழிக்  காண்க. ‘குக்கூ’
(குறுந்-157) என்பதனைக் காட்டுவாருமுளர்.
  

சிவ.
  

இச் சூத்திரம் தலைவன் தலைவியைப் பிரிந்துறையா நாள் இன்னதென வரையறுக்கின்றது.
  

இ-ள் :  பூப்பு வெளிப்பட்ட நாள்  முதலாகப் பன்னிரண்டு நாள்களிலும் தலைவன் தலைவியை அணுக
இருந்தும் நீங்கியோ  


இருவர்க்கும்  பிரிவு  இருத்தலின் உறையான்  என  ஒருமையிற் கூறாது உறையார் எனப் பன்மையிற்
கூறினார்.
  

1 உரைப்பார் யார் என்பது தெரியவில்லை,