சிறந்தது பயிற்றல் |
190. | காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. | (51) |
|
பி.இ.நூ. |
நம்பியகம், இல.வி.112 |
மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து மிக்க காமத்து வேட்கை தீர்ந்துழி தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித் தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப. |
இளம். |
இது தலைவற்கும் தலைவிக்கும் உரியதோர் மரபு உணர்த்திற்று. |
(இ-ள்) சிறந்தது பயிற்றலாவது-அறத்தின் மேல் மன நிகழ்ச்சி. |
*சூத்திரத்தாற் பொருள் விளங்கும். |
நச். |
இது முன்னர் இல்லற நிகழ்த்திய தலைவனுந், தலைவியும் பின்னர்த் துறவற நிகழ்த்தி வீடுபெறுப என்கின்றது. |
(இ-ள்) : கிழவனும் கிழத்தியும்-தலைவனுந் தலைவியும் சுற்றமொடு துவன்றி-அறம்புரி மக்களொடு உரிமைச் சுற்றத்தோடே கூடிநின்று இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களோடே, சான்ற காமங்1 கடைக்கோட் காலை-தமக்கு முன்னரமைந்த காமத்தினையுந் தீதாக உட்கொண்ட காலத் |
* சூத்திரப் பொருள் : தலைவனும் தலைவியும் தம் காம இன்பத்துக்குரியன யாவும் துய்த்து மனநிறைவு பெற்ற காலத்து அவ்வாறே இன்பம் நிறைந்த முடிவுள்ள மற்றைய மக்களொடு சேர்ந்து தம்போல் முன்னரே துறவறத்தை மேற்கொண்டுள்ள சுற்றத்தாரோடு சிறந்ததாகிய வீடுபேற்றுக்குரிய அறத்தைப் பயிலுதல் கடந்த கால இல்லறத்தின் பயனாம் என்றவாறு.-சிவ. |
1 காமம் சான்ற என்பதைச் சான்ற காமம் என மாற்றியது தவறு. பெயரெச்சச் சொல் இறுதியில் வராது. |