கற்பியல் சூ.51293
 

பாதுகாத்து,     அவர்க்கு   வேண்டுவன   கொடுக்கும்   மகளிர்-நாஞ்   செல்கின்ற   வானப்    பிரத்த
காருகத்திற்குத்  துணையாவரெனத்  தலைவன்  கூறவே தலைவியும்  பொருள்களிற்  பற்றற்றாளாய்  யாமுந்
துறவறத்தின் மேற்செல்வாமெனக் கூறியவாறு காண்க. பிறவும் வந்துழிக் காண்க.1
  

வாயில்கள்
 

191.

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப. 

(52)
 

பி.இ.நூ.
  

நம்பியகம் 68.
  

கொளைவல் பாணன் பாடினி கூத்தர்
இளையோர் கண்டோர் இருவகைப் பாங்கர்
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக் கிழத்தியர் காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல்
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் தாமே.

  

இல.வி.436.
  

நம்பியகச் சூத்திரமே.
  

இளம்
  

இது கற்பின்கண் வாயில்களாவாரை யுணர்த்திற்று.
  

இ-ள்:   பாட்டி   என்பது   பாடினி   என்றவாறு.  தோழி  முதலாகச்  சொல்லப்பட்ட  பன்னிருவரும்
வாயில்கள் ஆவார் என்றவாறு.
  

நச்
  

இது, வாயில்களைத் தொகுத்து அவருந் துறவிற்கு உரியவராவர் என்கின்றது.   


1 மேற்பாடலைத் தலைவன் தலைவியிடம் கூறியதாகக் கொண்டு இவ்வாறு எழுதினார்.