கற்பொழுக்கத்தில் தலைவனுக்குக் கூற்றுகள் நிகழ்வது போன்று தலைவிக்கும் நிகழ்கின்றன. தலைவியின் கூற்று பத்தொன்பது சூழலில் அல்லது இடங்களில் நிகழ்கின்றன. அவை: 1. தலைவனை உயர்த்திக் கூறுமிடத்து, 2. தோழி கூறியவாறு தலைவனைத் தான் நிலைபெறுத்துமிடத்து, 3. தலைவனிடம் மாறாத அன்பு கொள்ளுமிடத்து, 4. பிரிவிடத்தில் அலமரல் அதிகரித்த நிலையில், 5. இன்பமும் துன்பமும் ஒருங்கு நேர்ந்த இடத்து, 6. புறத்தொழுக்கத்தால் தலைவன் தனக்கு இளிவரவு தோன்றிய இடத்து, 7. தலைவன் பரத்தமை ஒழுக்கத்தால் பிரிவு நேர்ந்த போது அப்பரத்தமை ஒழுக்கத்தைச் சுட்டிக் கூறுமிடத்து, 8. தலைவன் தெளிவிக்க முயன்றபோது இதனை எங்கையர்க்கு உரை என்னுமிடத்து, 9. புதல்வனால் தடுக்கப் பெற்ற தலைவனைச் செல்க என விடுக்குமிடத்து, 10. காமக் கிழத்தி புதல்வனைத் தழுவிய விடத்து, 11. பின்புறமாக வந்து தலைவன் ஊடலைத் தீர்க்க முயன்றவிடத்து, 12. தலைவன் ஒழுக்கத்தைக் கொண்டு தன் புதல்வனைப் பழிக்குமிடத்து, 13. ஊடலில் தலைவனை விலக்கிக் கூறுமிடத்து, 14. தன் காலில் விழுந்து ஊடலைத் தீர்க்கமுயன்ற தலைவனிடம் “இது எங்கையர் காணின் நன்றன்று” என்னுமிடத்து, 15. பரத்தையர் வீட்டிற்கு எடுத்துச் சென்று திரும்பிய புதல்வனை வெகுளுமிடத்து, 16.தலைவன் பொய்ச்சூளுரைத்தவிடத்து, 17. காமக்கிழத்தியைப் பழித்துரைக்குமிடத்து, 18. தோழியை நோக்கிக் காய்தல், உவத்தல் முதலியன பற்றி உரைக்குமிடத்து, 19. வாயில்களை நோக்கிக் கூறுமிடத்து என்ற சூழல்களில் கூற்று நிகழும். (6) |
1. பொருள் முற்றி மீண்ட தலைவனைச் சிறப்பிக்கின்ற இடத்து, 2. களவில் ஏற்பட்ட வருத்தம் கற்பில் நீங்கிய இடத்து, 3. தலைவன் காரணமாகத் தெய்வக் கடன் கொடுக்குமிடத்து, 4. தலைவன் தலைவியை மறந்த நிலையில், 5. தலைவனின் புறத்தொழுக்கத்தால் மனம் வருந்திய தலைவியைத் தேற்றுமிடத்து, 6. பரத்தையைப் பிரிந்து வந்தானைத் தலைவிக்குத் |