பொருட் சுருக்கம்11
 

தலையளி     செய்  என்னுமிடத்து,  7. தலைவனைப்  பணிந்த  மொழியால்  வணங்குமிடத்து, 8. புறம்
சென்ற  தலைவனின்  குற்றத்தை  எடுத்துக்  கூறுமிடத்து,  9.  புதல்வன்   பிறந்ததையும்  நினையாமல்
பரத்தையிடம் தலைவன் தங்கினதால் ஏற்பட்ட தலைவியின் தனிமையைக்  கூறுமிடத்து,  10. தலைவியின்
நலத்தைத்  தந்து  போ  என்று  கூறுமிடத்து,  11.  தலைவனின்  கொடுமையைத்  தலைவி,  தன்னிடம்
கூறுவதற்கு  நாணிய  போது,  12.  தலைவன்   பொய்ச்சூளுரைத்தவிடத்து, 13. பெரியோரின்  ஒழுக்கம்
பெரிது  என்று  தலைவனிடம்  கூறியபோது,  14.  தலைவியின்  ஊடலைத்  தணிவிக்கும்  போது,  15.
தலைவியின்  ஊடலைத்  தணிவிக்குமாறு  தலைவன்  கோரியபோது,  16.  களவுக் காலத்தில் அரியதாக
இருந்த  நான்  கற்புக்  காலத்தில்  எளிதாக  ஆகிவிட்டேன்  என்று இரக்கமுற்ற நிலையில், 17. பாணர்
முதலியோர்  குறை வேண்டிய போது எடுத்துரைக்குமிடத்து, 18. பரத்தையிற் பிரிந்து  வந்த தலைவனைக்
கண்ணோட்டமின்றி    விலக்குமிடத்து,    19.    தலைவன்   சேயிடத்துப்   பிரியும்போது   அதனை
எதிர்த்துரைக்குமிடத்து எனத் தோழிக்கு கூற்று நிகழும். (9)
  

அக     வாழ்க்கையில் தலைவனுடனும் தலைவியுடனும் மிகவும் தொடர்பு கொள்ளும் ஒரு பாத்திரம்
தோழி. பாத்திரத்தின் கூற்றைக் கொண்டும் கூற்றின் எண்ணிக்கையைக்  கொண்டும் தொடர்பு கொள்ளும்
முறைமையை எடுத்தியம்புகின்றது.
  

காமக்கிழத்தி கூற்று
  

தொல்காப்பியக்  காலத்தில்  தலைவன்  தலைவியைத்  தவிர்த்த   பிற    பெண்டிருடன்  தொடர்பு
கொண்டுள்ளான்.  அவர்கள்  காமக்கிழத்தி என்றும் பரத்தை என்றும் பெயர்  பெறுவர். காமக்கிழத்தியர்
பின்முறை   ஆக்கிக்  கொள்ளப்படுவதுமுண்டு.  பரத்தையர்  ஆடலும்  பாடலும்  வல்லவர்;  அழகும்
இளமையும்  காட்டி  இன்பமும்  பொருளும்  நாடி  ஒருவர்  மாட்டும் தங்காதவர்கள்.  தொல்காப்பியம்
முன்னதாகக் கூறிய காமக்கிழத்திக்கு எட்டுச் சூழலில் அல்லது இடத்தில் கூற்று நிகழ்கின்றன.  அவை; 1.
புல்லுதலைப் பொருளாகக் கொண்ட புலவி இடத்து, 2. மனையகத்தாரான தலைவனையும்  தலைவியையும்
இகழும்  இடத்து, 3. தலைவியின் புதல்வனைக் கண்டு உவந்தவிடத்து, 4. பொறுக்கலாற்றாத  துன்பத்தின்
போது,  5.  தலைவியைக் காய்தலின்றி உயர்த்திக் கூறித் தலைவன் பால் குற்றத்தைப்  பொருத்துமிடத்து,
6. இறுதியாக வந்த புதல்வனை வாயிலாக ஏற்குமிடத்து, 7. தானும் தலைவியை ஒத்தலின்  தன்னை ஒத்த