12தொல்காப்பியம் - உரைவளம்
 

பிறர்  தலைவனுக்குத்  தேவையில்லை  என்றுரைக்குமிடத்து,  8. ஆறும் குளனும் காவும் சென்று ஆடும்
விளையாட்டிடத்து என்பதாக இவள் கூற்று நிகழும்.
  

செவிலி கூற்று
  

செவிலி     தலைவியின் வளர்ப்புத் தாய், செவிலி தாயைப் போன்று பாசத்தோடும் தோழி போன்று
அன்போடும்   இருப்பாள்.   அதனால்,   தலைவியின்  கடந்த  கால  வாழ்க்கை  அல்லது  இளமைப்
பருவத்தையும் நிகழ்காலத்தின் தன்மையையும் உணர்ந்து,  வரும்  காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும்
என்பதையும்  உணர்ந்து  நிகழ்வுகளைப்  பகுத்தாய்ந்து  நல்லனவற்றை   உரைத்தலும் அல்லனவற்றைக்
கடிந்து நல்வழிப்படுத்தலும் செவிலிக்குரிய பண்பாகும் (12). இந்தத் தன்மை அறிவர்க்கும் உண்டு.(13)
  

கூத்தர் கிளவி
  

கூத்தர்  கிளவி  முன்புள்ளவர்  இவ்வாறு செய்வர் என்ற வழியும், நுகர்ச்சி இவ்வாறு இனியது என்று
புகழ்ந்து  கூறிய  விடத்தும்,  இவ்வாறு  செய்தல்  சரியன்று  என்று  கூறி ஊடலைத் தவிர்க்குமிடத்தும்,
ஊடல்  தணிந்ததினால்  ஏற்பட்ட  பயன் இது என்று கூறுமிடத்தும்,  தலைவியின் கெட்ட அறிவை இது
என்று சுட்டிக்காட்டி அதனைக் குறைக்குமிடத்தும், பிறள் ஒருத்தி செய்த பிழையை  எடுத்துக்காட்டி  இது
செய்யின்  இது  விளையும்  என்று  கூறி  மாற்றுமிடத்தும்,  தலைவியின்   மனந்துணியுமாறு   காரணங்
காட்டுமிடத்தும்,  நிகழும்  (27).கூத்தர்களின் செயல்பாட்டால் குடும்பத்தில்  தலைவன்  தலைவிக்கிடையே
கருத்து வேறுபாடு மாறி இயல்பு நிலையுண்டாகும்.
  

தலைவன் பிரிந்தவிடத்துச்  சென்று  கூறுதலும் தலைவி நின்ற நிலையை எடுத்துரைத்தலும் கூத்தர்க்கு
உரிய பணியாகும்.
  

ஊடல்
  

தலைமகளுக்குக்  களவு காலத்திலும் கற்புக் காலத்திலும் ஊடல் ஏற்படும், கற்பிடத்துத் தலைவி ஊடிய
வழி, அவன் தேற்றத்  தேறுமெல்லை  இகந்தமையாலும் களவில் தலைவி செய்த குறியைத் தானே தப்பிய
காலத்தும்  சிறிது  ஊடல்  கொள்வர்  (19).  ஊடல்   பெரும்பிரிவு  கற்புக்  காலத்தில் நிகழ்வதால் இது
கற்பியலில்  வைக்கப்பட்டுள்ளது.  தலைவியின்  ஊடல்   இரண்டு  பொருண்மைகளில்  அமைந்துள்ளன.
ஒன்று தலைவனின்