குறிப்பறிதல் வேண்டியது. மற்றொன்று தலைவி தன்னுடைய அகமலிந்த ஊடல் நீங்குவது. இவ்விடங்களில் தலைவி அயன்மையுடைய சொல்லைப் பயன்படுத்துவர். (20) |
தலைமக்களின் புலத்தலையும் ஊடலையும் தீர்க்க தோழி பேசுவாள். பரத்தமை மறுத்தல், தலைவியிடம் அன்பு கொள்ளாமை என்ற இரண்டு பொருண்மையின் போதும் தலைவனைக் கடிந்துரைக்கும் உரிமை தோழிக்குண்டு (17). |
அலர் |
தலைவன் தலைவியிடை ஏற்பட்டுள்ள காதல் ஒழுக்கத்தைப் பற்றி ஊரார் பேசுகின்ற பேச்சு அலர். களவு காலத்திலும் கற்பு காலத்திலும் அலர் ஏற்படும் (21). அலர் தூற்றலினால் தலைவனுக்கும் தலைவிக்கும் காமத்தில் அதிக ஈடுபாடு (22) தோன்றும். பரத்தையர் சேரியில் தலைவன் ஆடியும் பாடியும் கண்டும் கேட்டும் இன்பம் நுகரும் விளையாட்டின் போதும் அலர் தோன்றும். (23) |
பிரிவு |
தலைவன் தலைவியிடை கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாகப் பிரிவு ஏற்படலாம். கற்பில் ஓதல், தூது, பகை, பரத்தை என்ற முறையில் பிரிவு காணப்படுகிறது. |
தவம் |
தலைவனும் தலைவியும் தன்னுடைய வாழ்க்கையில் நுகர்ந்த நுகர்ச்சி நிறைவுறுகையில் மேற்கொள்ளும் நிலைதவமாகும் (51). இதனை வெள்ளைவாரணனார் கூறுகையில் “மனை வாழ்க்கையினை நிகழ்த்திய கணவன் மனைவி என்னும் இருவரும் தாம் விரும்பிய நுகர்ச்சிகளை நுகர்ந்து மனநிறை பெற்று மனையறத்தினை முடிவு போக நிறைவேற்றிய நிலையிலே தமக்குப் பாதுகாவலமைந்த பிள்ளைகளுடன் நிறைந்து அறத்தினை விரும்பிய சுற்றத்துடனே (உயிரினும்) சிறந்ததாகிய செம்பொருளை இடை விடாது எண்ணிப் போற்றும் நன்னெறியிற் பழகுதல் இதுகாறும் மேற்கொண்டு நிகழ்த்திய மனையறத்தின் முடிந்த பயனாகும்” என்று சுட்டுகின்றார். |