லாகர ஈற்று உயர் பெயர்க்கு = பொதுவிதி அன்றி லகரமெய் ஈற்று உயர்திணைப் பெயர்க்கு , ( ஒருசார் ) அளபு = சில அளபெடுத்தலும் , ( ஒருசார் ) அயல் நீட்சியும் = சில ஈற்றயல் நீளுதலும் , யகாரவீற் (றுயர்பெயர்க்கு ) அளபும் = யகரமெய்யீற்று உயர்திணைப் பெயர்க்கு அளபெடுத்தலும் , உருபு ஆம் - விளி உருபுகள் ஆகும் . மால் - மாஅல் எனவும் , தோன்றல் - தோன்றால் எனவும் , சேய் - சேஎய் எனவும் அம்மூன்று உருபுகளும் வந்தன . 53
|