| செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டில் = செய்த என்றும் செய்கின்ற என்றும் செய்யும் என்றும் சொல்லப்படும் மூவகைச் சொற்களிலே, காலமும் செயலும் தோன்றி = முறையே இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களும் தொழிலும் தோன்றி, பாலொடு = வினை முற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாது அப்பாலுடனே, செய்வது ஆதி அறுபொருட்பெயரும் = செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செயப்படுபொருள் என்னும் அறுவகைப் பொருள் பெயர்களும் ,எஞ்ச நிற்பது பெயரெச்சம் - ஒழிய நிற்பன பெயரெச்சவினை வினைக்குறிப்புக்களாம். நிற்பது என்பது தொகுதி ஒருமை. ஏற்புழிக்கோடலால், தோன்றி என்பது வரைக்கும் தெரிநிலையுடன்பாட்டிற்கும், ஒழிந்த விதி தெரிநிலையும் குறிப்புமாகிய உடன்பாடு எதிர்மறை இரண்டற்குங் கொள்க. 1. | இற. | நிகழ்! | எதிர். | | | உண்ட | உண்கின்ற | உண்ணும் | சாத்தன் .... வினைமுதல் . கலம்......கருவி. இடம் .... நிலம். ஊண் .... தொழில். நாள் .... காலம். சோறு .... செயப்படுபொருள். |
2. "வேலாண் முகத்த களிறு" " மூவிலையவேல்," உள்ளபொருள், கரியகுதிரை, புதியநட்பு எனக் குறிப்புவினைப் பெயரெச்சம் வரும். 3. உண்ணாத குதிரை, உண்கலாத குதிரை, உண்கிலாத குதிரை என எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சம் வரும். 4. இல்லாத பொருள், அல்லாத குதிரை என எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சம் வரும்.
இங்கே உண்ட என்பது; உணல் என்னும் தொழிலும் இறந்த காலமும் தோன்றி, அத்தொழில் நிகழ்த்துதற்கு வேண்டும் பால் தோன்றாமையும் அப்பாலுடனே பெயர் ஒழிய நின்றமையும் அறிக. அறுபொருட்பெயரும் என்ற உம்மையால், இன்னதற்கு , இது பயன் என்னும் இருபொருள்பெயர் எஞ்ச நிற்பனவும் பிறபெயர் எஞ்ச நிற்பனவும் கொள்க. 1. களை கட்ட பயிர் - இது இன்னதற்கு என்னும் பெயர் எஞ்ச நின்றது. களை கட்ட கூலி - இது இதுபயன் என்னும் பெயர் எஞ்ச நின்றது. 2.உண்ட இளைப்பு, ஆறு சென்ற வியர். உண்ட எச்சில் எனவும், குடிபோன ஊர், பழமுதிர்ந்த கோடு எனவும், பொன் பெரிய நம்பி எனவும், பிறபெயர்கள் எஞ்ச நின்றன. "நின்முகங்காண் மருந்தினேன்" என்புழிக், காட்சியை மருந்து என்றதாகலின் தொழிற்பெயர் எஞ்ச நின்றது. 21
|