உ கணபதி துணை |
நன்னூல் |
மூலமும், மயிலைநாதருரையும் |
நன்னூற்சிறப்புப்பாயிரம் |
|
| | மலர்தலை யுலகின் மல்கிரு ளகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் 1பருதியி னொருதா னாகி முதலீ றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த |
| 1 | அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின் மனவிரு ளிரிய மாண்பொருண் முழுவதும் முனிவற வருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள் |
| 10 | அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார் இகலற நூறி யிருநில 2முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் |
| 15 | கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோத னமரா பரணன் மொழிந்தன னாக முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் |