| 5 | உடையோ ரிலரா சிரியரா குதலே. |
| (31) | 2பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. |
| (32) | தானே தரக்கொளி னன்றித் தன்பால் மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை. |
| (33) | அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. |
| (34) | பல்வகை யுதவி வழிபடு 3பண்பின் நல்லோரொழித், தல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே. |
(இ - ள்.) இப்பெற்றிக் குற்றங்களையுடையோர் கற்கப்படாதோர் எ - று. (பி - ம்.) 1கொப்பன 2பெய்தல் 3பண்பினல்லோர்க்கு |
| (30-34) |
| 3. பாடஞ்சொல்வதன் இலக்கணம் |
| | (35) | ஈத லியல்பே யியம்புங் காலைக் காலமு மிடனும் வாலிதி னோக்கிச் சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி உரைக்கப் 1படுபொருள் ளுள்ளத் தமைத்து |
| 5 | விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக் கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப. |
(இ - ள்.) இவ்வாறளித்தல் 2ஈதலியல்பு எ - று. (பி - ம்.) 1படும்பொருள் 2இயல்பு |
| (35) |
| 4. மாணாக்கர் |
| | (36) | தன்மக னாசான் மகனே மன்மகன் பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற் குரைப்பது நூலே. |
| (இ - ள்.) கற்பிக்கப்படுமாணாக்கராவாரிவர் எ - று. |
| (36) |
| மாணாக்கர்வகை |
| | (37) | அன்னமாவே மண்ணொடு கிளியே இல்லிக் குடமா டெருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். |