100

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வ - று. புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது; ஞான்றது, வலிது எ - ம், கடுமை, ஞாற்சி,
வலிமை எ - ம் இருவழியும் 2மூவினமும் வர உகரம் பெற்றன.

     உம்மையால், புள்கடிது புட்கடிது எ - ம், புட்கடுமை எ - ம், வள்கடிது வட்கடிது
எ - ம், வட்கடுமை எ - ம் உகரம்பெறாது பொதுவிதிபெறுதலும் கொள்க.

     (பி - ம்.) 1 பெயர்மானும் 2 மூவினத்தோடும் உகரம்

(31)

(234)

சுட்டு வகர 1மூ வினமுற முறையே
ஆய்தமு மென்மையு மியல்பு மாகும்.

     எ - ன், வகரவீறுபுணருமாறு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) சுட்டைமுதலாகவுடைய வகரம் வல்லினமும் மெல்லினமும்
இடையினமும்வந்தால் முறையே ஆய்தமும் வந்தமெல்லெழுத்தும் இயல்பும் ஆகும்
எ - று.

     வ - று. 2அஃகடிய, அஃசிறிய, அஃதீய, அஃபெரிய, அஞ்ஞான்றன, அவ்வலிய
என முறையே காண்க.

     (பி - ம்.) 1மூவினம்வர 2அஃகடிய, அஞ்ஞானம், அவ்யானை

(32)

(235)

தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்.

     இதுவுமது.

     (இ - ள்.) தெவ்வென்னுமொழி இருவழியும் தொழிற்பெயரேபோல
உகரம்பெற்றுப்புணரும்; மகரமுதன்மொழிவரின் ஈற்று வகரம் மகரமுமாம் எ - று.

     வ - று. தெவ்வுக்கடிது; ஞான்றது, வலிது எ - ம், தெவ்வுக்கடுமை; ஞாற்சி,
வலிமை எ - ம், தெம்மன்னர், தெம்முனை (பு. வெ. 4 : 8) எ - ம் வரும்.

(33)

(236)

*னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகுந் தநக்க ளாயுங் காலே.
     எ - ன், வருமொழித்திரிபு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) னகாரலகாரங்களின்முன்னர்த் தகாரநகாரங்கள் வந்தால்
றகாரனகாரங்களாம். ணகாரளகாரங்கள்முன்னர்த் தகாரநகாரங்கள் வந்தால்
டகாரணகாரங்களாம் எ - று.

     வ -று. பொன்றீது, பொன்னன்று; கற்றீது, கன்னன்று எ - ம், மண்டீது,
மண்ணன்று; முட்டீது, முண்ணன்று எ - ம் அல்வழிக்கண் வந்தன. பொன்றீமை,
பொன்னன்மை; கற்றீமை, கன்னன்மை எ - ம்,
     * “லனமுன் றனவும் ளணமுன்டணவும்” எனப் பாடமும் அதற்கேற்ப உரையும்
உதாரணங்களும் பழம்பிரதிகள் பலவற்றிற் காணப்படுகின்றன.