4. - மெய்யீற்றுப்புணரியல் | 101 | | | மண்டீமை, மண்ணன்மை; முட்டீமை, முண்ணன்மை எ - ம் வேற்றுமைக்கண் வந்தன.
1 ‘ஆயுங்கால்’ என்றதனான், நிரனிறைகொள்ளாது நிலைமொழி ஒன்றுடனே வருமொழியிரண்டும் வருமெனக்கொள்க.
(பி - ம்.) 1ஆயுங்காலை | (34) | | (237) | உருபின் 1 முடிப்பவை யொக்கு2மப் பொருளினும். | எ - ன், பதப்புணர்ச்சிக்கு ஒரு 3கருவியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேல் உருபுபுணர்ச்சிக்கட் சொல்லுமவை, 4அவ்வுருபின் பொருளான ஈண்டைவேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் எ - று.
வ - று. மேல் உருபுபுணர்ச்சிக்கண் எல்லாமென்பது அஃறிணையான காலை அற்றுச்சாரியையும் உருபின்மேல் உம்மும், உயர்திணையானகாலை நம்மும் உருபின்மேல் 5உம்முமாமென்பார்; ஈண்டும் அவ்வாறே வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கும், எல்லாவற்றுக்கோடும், எல்லாநங்கையும் எனவும், தான், தாம், நாம் என்பன குறுகுமெனவும், யான், யாம் என்பன என், எம் எனவும், நீயென்பது நின் எனவும் நீரென்பது நும்மெனவும் ஆமென்பார்; ஈண்டும் அவ்வாறே தன்கை, தங்கை, நங்கை எனவும், என்கை, எங்கை எனவும், நின்கை எனவும், நுங்கை எனவும், ஆ மா கோ என்பன னகாரம் பெறுமென்பார்; ஈண்டும் அவ்வாறே ஆன்கோடு, மான்கோடு கோன்குணம் எனவும், சுட்டுமுதல் வகரம் அற்றுச்சாரியை பெறுமென்பார்; ஈண்டும் அவ்வாறே அற்றுப்பெற்று அவற்றுக்கோடெனவும் வருமென்றாரெனவுணர்க. பிறவும் இவ்வாறே வருவனவெல்லாம் அறிந்து கொணர்ந்து முடிக்க.
(பி - ம்.) 1முடிபவை 2மிப்பொருளினும் 3விதி 4அவ்வுருபுப் பொருளான ஈண்டை 5உம்முமென்றார் | (35) | | (238) | இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும் போலியு1 மருவும் பொருந்திய வாற்றிற் கியையைப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே. | எ - ன், 2இவ் வைவகை மொழிகட்கும் ஆவதோர்விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இடைச்சொல்லினும் உரிச்சொல்லினும் வடசொல்லினும் மேலை உயிரீறும் ஒற்றீறுமான புணரியலோத்துக்களில் தோன்றல் திரிதல் கெடுதல் இயல்பென ஓதிய புணர்ச்சியிலக்கணங்களில் மாறுபட்டுவருவனவும் இலக்கணப்போலிமொழிகளும் மரூஉமொழிகளும் இருவகைவழக்கின்கண்ணும் நடக்கும்முறைமையையறிந்து அதற்குப் பொருந்துமாறு புணர்க்கை 3கற்றுவல்லோ ரெல்லார்க்கும் கடன்எ - று.
வ - று. ஆன்கன்று 4மான்றலை, கோன்குணம், வண்டின்கால், நாயின்கால், தேரின்செலவு, யாழின்புறம் என வேற்றுமைக்கண் சாரியையிடைச்சொற்கள் இயல்பாயின. தடந்தோள் என அகரவீற்று | |
|
|