5. - உருபுபுணரியல்

103

   
     (இ - ள்.) இவ்வைந்துபெயருடனும் எழுவாய் வேற்றுமையான பெயர்முதலாக
விளியீறாகநின்ற எட்டினையும் உறழ வேற்றுமை யுருபுகள் நாற்பதாம் எ - று.

     வ - று. நம்பி, சாத்தி, மக்கள், 4மரம், மாடுகள். இவற்றுள், நம்பி, நம்பியை,
நம்பியால், நம்பிக்கு, நம்பியின், நம்பியது, நம்பிகண், நம்பீ என உயர்திணை
ஆண்பாலொருமைப்பெயரோடு எட்டுருபும் வந்தவாறு.

     ஏனை நான்குபெயரோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.

     (பி - ம்.) 1 (1) உருபியலோத்தென்னும் (2) உருபியலென்னும் 2 இயைபுஇதற்கு 3
ஆயின், இத்தலைச் 4 மரம், மரங்கள்

(1)

 

(240)

பெயர்வழித் 1தன்பொரு டரவரு முருபே.

     எ - ன், வேற்றுமையுருபு 2வருமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பெயர்க்குப் பின்னாகத் தன்பொருளைத் தோற்றுவித்தற்கு வரும்,
3வேற்றுமையுருபு எ - று.

     வ - று. மரம், மரத்தை, மரத்தால், மரமே எனவரும்.

     (பி - ம்.) 1தம்பொருள் 2புணருமிடம் 3வேற்றுமையுருபுகள்

(2)

 

(241)

ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
1ஒக்கும னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே.

     எ - ன், உருபுகள் பதத்தொடு புணருமுறைமை மாட்டெறிந்துணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகவுடைய உருபுகள்
நிலைமொழியாயும் 2வருமொழியாயும்

     பதத்தோடுபுணருமிடத்து ஒற்றும் உயிரும் முதலும் ஈறுமாகவரும் பெயர்ப்பதங்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் தம்முட் புணரும் புணர்ச்சியோடு ஒப்பனவாம், பெரும்பாலும் எ - று.

     வ - று. நம்பியையென்புழி, நம்பியென உயிரீற்று ஒருமைப் பெயரைநிறுவி,
அதன்வழியே, ‘பெயர்வழித் தன்பொருள் தரவரு முருபே’ என்றதனால் ஐயுருபுதந்து,
‘இஈ ஐவழி யவ்வும்’ என்றதனால் யகரவுடம்படு மெய்யைவருவித்து, ‘உடன்மே லுயிர்வந்
தொன்றுவ தியல்பு’ என்றதனால் உடன்மேலுயிரேற்றி நம்பியை என முடிக்க. இவ்வாறே
உயிரீற்றுப்பெயர் மேல் உயிர்முதலுருபுகள்வந்தன முடிக்க. நம்பிக்கு என்புழி, நம்பியென
நிறுவி, ‘பெயர்வழித் தன்பொரு டரவரு முருபே’ என்றதனாற் குவ்வுருபு தந்து,
‘பொதுப்பெய ருயர்திணைப்பெயர்கள்’ என்றதனால் இயல்பாகவர, அதனை இதனுள்
‘மன்’ என்ற விதப்பானே மாற்றி, ‘இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன்’ என்பதனாற்
ககரவொற்றைமிகுத்து நம்பிக்கு என முடிக்க. நம்பிகண் என்புழி நம்பியெனநிறுவி,
‘பெயர்வழி’ என்றதனாற் கண்ணுருபுதந்து, ‘இயல்பினும் விதியினும்’ என்றதனானே,
ககரவொற்று 3மிகுவான்வர இதனுட் பெரும்பாலுமொக்குமெனச் சொல்லியவதனானே
சிறுபான்மை யொவ்வாதாகலின் ஈண்டுக் ககரத்தை 4மிகுக்காது நம்பிகண் என முடிக்க.
இவ்வாறே உயிரீற்றுப்பெயர்மேல்வரும்