104

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
ஒற்றுமுதலுருபுகளெல்லாமுடிக்க. நம்பீயென்னும் 5விளியுருபு சொல்லதிகாரத்து விளி
வேற்றுமைப்படியே கொள்க. பொன்னையென்புழி பொன் என ஒற்றீற்று
அஃறிணையொருமைப் பெயரைநிறுவி முன்போல ஐயுருபுதந்து, ‘தனிக்குறின் முன்னொற்
றுயிர்வரி னிரட்டும்’ என்றதனால் னகரத்தையிரட்டித்து, ‘உடன்மே லுயிர்வந்
தொன்றுவது’ என்றதனால் ஈற்று னகரத்தின்மேலே உருபுயிரையேற்றிப்
பொன்னையெனமுடிக்க. இவ்வாறே மெய்யீற்றுப் பெயர்மேல்வரும்
உயிர்முதலுருபுகளெல்லாம் முடிக்க. பொற்கு 6என்புழிப் பொன் எனநிறுவிக்
குவ்வுருபுதந்து, ‘ணனவல்லினம்வரட்டறவும்’ என்றதனால் னகரத்தை றகரமாக்கிப்
பொற்கு எனமுடிக்க. இவ்வாறே மகவை மகவான், மகக்கு மகக்கண்; காவை காவான்,
காக்கு காக்கண்; கிளியை கிளியான், கிளிக்கு கிளிக்கண் எ - ம், மண்ணை மண்ணான்,
மட்கு மட்கண்; வேயை வேயான், வேய்க்கு வேய்க்கண்; ஊரை ஊரான், ஊர்க்கு
ஊர்க்கண்; பாழை பாழான், பாழ்க்கு பாழ்க்கண் எ - ம் பெரும்பாலொப்பனவும்,
அவர்க்கு அவர்கண், அரசர்க்கு அரசர்கண், பார்ப்பார்க்கு பார்ப்பார்கண், சாத்தற்கு
சாத்தன்கண் எ - ம், விளவிற்கு விளவின்கண், ஆவிற்கு ஆவின்கண், ஊரிற்கு
ஊரின்கண் எ - ம் சிறுபான்மை புணர்ச்சியொவ்வாதனவும் கண்டுமுடிக்க.

     இனி இவ்வாறு முடிந்துநின்ற உருபுப்பதங்களை நிலைமொழியாக நிறுவி,
உயிர்முதலாயும் மெய்ம்முதலாயும்வரும் மொழிகளோடு மேலைப் புணரியல்களிற்
புணர்த்தவாறே புணர்க்க.

     (பி - ம்.) 1ஒக்குமன்னப்பெயர் 2மேல்வருமொழியாயும் 3மிக்குவர4மிகாது
5விளிவேற்றுமை 6என்பதற்கு

(3)

(242)

பதமுன் விகுதியும் பதமு முருபும்
புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை
வருதலுந் தவிர்தலும் விகற்பமு மாகும்.

     எ - ன், சாரியைவருமிடமும் வருமியல்பும் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) 1நிலைப்பதத்தின்முன்னர் விகுதியும் பதமும் உருபும்வந்து
தொடருமிடத்து அவ்விரண்டிற்கும் இடையே ஒன்றும் இரண்டும் சாரியை
2வந்துநிற்றலும் வாராதொழிதலும் ஒன்றற்கே ஓரிடத்துவந்து ஓரிடத்து வாராது
வழங்குதலுமாம் எ - று.

     எனவே 3சாரியை எல்லாவற்றிற்கும் ஒருதலையன்றி ஒன்றற்கே வரவேண்டியும்
வரவேண்டாதும் ஒன்றற்கே ஓரிடத்துவேண்டியும் ஓரிடத்து வேண்டாதும் வரப்பெறும்;
அவ்விடங்களறிந்து வருவித்துப் புணர்க்க வேண்டுமென்றவாறு.

     வ - று. விகுதிப்புணர்ச்சிக்கண் 4ஊரது, உண்டது என்றற்றொடக் கத்தன
சாரியைவேண்டியேநின்றன. வெற்பன், பொருப்பன், ஊரன், வீரன் என்றற்றொடக்கத்தன
சாரியைவேண்டாவாயின. உண்டனன் உண்டான், உண்டனன், உண்டாள், உண்டனர்,
உண்டார் எ - ம்,