மொழிகுவன் மொழிவன், மொழிகுவள், மொழிவள், மொழிகுவர் மொழிவர் எ - ம் 5ஒன்றற்கே ஓரிடத்துவேண்டியும் ஓரிடத்துவேண்டாதும் வந்தன.
இனிப் பதப்புணர்ச்சிக்கண் அரையேமுந்திரிகை, கலனே யிருநாழி என இவை தம்மிற் கீழான எண் அளவுகளில் வரவேண்டியே நின்றன. உருபுப்பொருட் புணர்ச்சிக்கண், அத்திக்காய்; ஞாற்சி, விறகு, 6அடி எ - ம், அல்வழிக்கண், அத்திகடிது; ஞான்றது, வலிந்தது, அசைந்தது எ - ம் நாற்கணத்தோடும் சாரியைவேண்டாது வந்தன. புளியங்காய்; ஞாற்சி, விறகு, அடி எ - ம், புளிகுறிது; ஞான்றது, வீழ்ந்தது, அழகிது எ -ம் நாற்கணத்தோடும் வேற்றுமையில் வேண்டியும் அல்வழியில் வேண்டாதும் வந்தன.7
8இனி உருபுபுணர்ச்சிக்கண் 9அவற்றை, அவற்றால், அவற்றுக்கண், அவையிற்றை, அவையிற்றால், அவையிற்றுக்கண்எ - ம், மரத்தை, மரத்தால், மரத்துக்கண் எ - ம் இவை வேண்டியேநின்றன; மரக்கு, மரக்கண் என வேண்டாது வரவும்பெறும். வேயை, வேயால், வேய்க்கு, வேய்க்கண் என இவை வேண்டாதுவந்தன. செருவை செருவிற்கு, விளவை விளவிற்கு என இவை ஒன்றற்கே ஓரிடத்துவேண்டியும் ஓரிடத்து வேண்டாதும் வந்தன. மரத்தினை, மரத்தினால், மரத்திற்கு, மரத்தின்கண்; அவற்றினை, அவற்றினால், அவற்றிற்கு, அவற்றின்கண் எனப் பலவும் வந்தன. உருபுபுணர்ச்சி யல்லாதவிடத்து ஒருதலையாக வேண்டியே 10நிற்பனவல்ல சாரியையெனக் கொள்க.
(பி - ம்) 1நிலைமொழிப்பதத்தின் 2(1) வருதலும் வராததும் (2) வந்து நிற்றலும் நில்லாவாதலும் வந்தும் வாராதுநிற்றலுமாம் எ - று. 3சாரியை யேற்றல் 4உள்ளது உண்டது 5ஒன்றற்கு வேண்டியும் வேண்டாதும் 6அடவி 7‘நினைகுமி னீவிரெல்லாம்” (நினையுமின்), “நினைமினீர் நீணில வேந்தீர்” என ஒன்றற்கே ஓரிடத்துவேண்டியும் வேண்டாதும்வந்தது 8இன்னும் 9அரணனி அவற்றை 10நிற்பனவுரியவல்ல | (4) | | (243) | அன்ஆன் இன்அல் அற்றிற் றத்தம் தம்நம் நும்ஏ அஉ ஐகுன 1இன்ன பிறவும் பொதுச்சா ரியையே. | எ - ன், மேற் சாரியையென்றார், அவை இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அன்னும் ஆனும் இன்னும் அல்லும் அற்றும் இற்றும் அத்தும் அம்மும் தம்மும் நம்மும் நும்மும் ஏயும் அவ்வும் உவ்வும் ஐயும் குவ்வும் னவ்வும் இவைபோல்வனபிறவும் விகுதி பதம் உருபு ஆனமூன்று புணர்ச்சிக்கும் பொதுவான சாரியைகளாம் எ - று.
வ - று. ஒன்றன்கூட்டம், ஒருபாற்கு, வண்டின்கால், “பூநறுந் தொடையல்சூடி,” பலவற்றை, பதிற்றுப்பத்து, மரத்திலை, புளியங்காய், எல்லார்தம்மையும், எல்லாநம்மையும், எல்லீர்நும்மையும், கலனேதூணி, | |
|
|