106 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | 2குன்றக்கூகை (குறுந். 153), சாத்தனுக்கு. “கேழ லட்ட 3பேழ்வாயேற்றை” (அகநா. 8), “துறுகன் 4மறையினு முய்குவை போலாய்” (புறநா. 300), ஆன்கன்று என முறையேகாண்க.
‘பிற’ என்றதனானே மற்று வருவனவும்கொள்க.
(பி - ம்.) 1அன்னபிறவும் 2வானமதி 3பேழைவாய் 4முழையினும் | (5) | | (244) | எல்லா மென்ப திழிதிணை யாயின் அற்றோ டுருபின் மேலும் முறுமே அன்றே னம்மிடை யடைந்தற் றாகும். | எ - ன், ஒருசார் 1சாரியைபெறுமாறுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) எல்லாமென்னும்பெயர் அஃறிணையானகாலை அற்றுச் சாரியையும் உருபின்மேலே உம்மும் பெறும்; 2உயர்திணையானகாலை இடையே நம்முச்சாரியையும் உருபின்மேலே முன்போல் உம்மும் பெற்று முடியும் எ - று.
வ - று. எல்லாவற்றையும், எல்லாவற்றொடும் எ - ம், எல்லாவற்றுக்கோடும்; செவியும், தலையும், புறமும் எ - ம் அஃறிணைக்கண் உருபினும் பொருளினும் அற்றும் உம்மும் வந்தன. எல்லாநம்மையும் எல்லா நம்மொடும் எ - ம், எல்லாநங்கையும்; செவியும், தலையும், புறமும் எ - ம் உயர்திணைக்கண் உருபினும் பொருளினும் நம்மும் உம்மும் வந்தன.
(பி - ம்.) 1சாரியையாமாறு 2உயர்திணை விரவுத்திணைகளான காலை | (6) | | (245) | எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே. | இதுவுமது.
(இ - ள்.) இவ்விருவகைச்சொல்லினும் ஈற்றில்நின்ற உம்மையை யழித்து முறையே தம்மும் நும்மும்சார உருபின்பின்னே உம்மைபுணரும் எ - று.
வ - று. எல்லார்தம்மையும், எல்லீர்நும்மையும் 1எ - ம், எல்லார் தங்கையும், எல்லீர்நுங்கையும் 2எ - ம் உருபினும் பொருளினும் சாரியையும் உம்மும் வந்தன.
எல்லாரையும் எல்லீரையும், எல்லார்கையும் எல்லீர்கையும், 3எனச் சாரியையை இடையில் ஏலாதும்வரும்.
(பி - ம்.) 1என உயர்திணைக்கண்ணே தம்மும் நும்மும் உருபின் மேல் உம்மும்பெற்றன 2எனப் பொருளினும் பெற்றன 3என ஏலாது வந்தன | (7) | |
|
|