| | (246) | தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம் நீ நீர் என்எம் நின்நு மாம்பிற குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல. | எ - ன், இவ்வேழு 1பெயரின்பின் ஆறுஉருபும் இன்னவாறு முடிக்க வென்பதுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) தானென்றும் தாமென்றும் நாமென்றும் வருஞ் 2சொற் களின் முதலுயிர்குறுகும்; யானென்றும் யாமென்றும் நீயென்றும் நீரென்றும் வருஞ்சொற்கள் முறையே என்னென்றும் எம்மென்றும் நின்னென்றும் நும்மென்றும்ஆகும்; இங்ஙனந்திரிந்து நின்றவழி நான்கா முருபு 3புணருமிடத்து இடையே அகரச்சாரியைவரும்; இவற்றுள் நான்காமுருபும் ஆறாமுருபும் புணருமிடத்து 4குற்றொற்றுக்கள் இரட்டாவாம் எ - று.
வ - று. தன்னை தன்னால் தனக்கு தன்னின் தனது தன்கண்எ - ம், தம்மை தம்மால் தமக்கு தம்மின் தமது தங்கண் எ - ம், நம்மை நம்மால் நமக்கு நம்மின் நமது நங்கண் எனவும்வரும். என்னை எம்மை நின்னை நும்மை என இவையும் அவ்வாறேவரும்.
நான்காவதற்கு 5விதியகரவீறுநின்று ககரவொற்றுமிக்கது.
‘பிற’ என்றதனானே வழக்கினுள் 6நீயென்பது உன்னென்றும் 7நீரென்பது உம்மென்றும் வரவும்பெறுமெனக் கொள்க.
(பி - ம்.) 1பெயர்ப்பின் ஆறுருபும் முடிக்க 2சொற்கள் 3புணர்விடத்து இவ்விடையே 4முற்கூறியகுற்றொற்று 5அகரம்வர ஈற்றுக் ககரவொற்றுமிக்கது 6நீயென்பதற்கு 7நீரென்பதற்கு | (8) | | | (247) | ஆமா கோனவ் வணையவும் பெறுமே. | எ - ன், ஒருசாரன சாரியைபெறுமாறுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்றுபெயரும் னகரச்சாரியைபெறவுங்கூடும் எ-று.
ஆவுடனேஓதினமையான் 1ஓரினம்பற்றி மாவென்றது விலங்குமாவை யெனக்கொள்க.
வ - று. ஆனை, மானை, கோனை எனவரும்.
உம்மையால், ஆவை, மாவை, கோவை எ - ம் இன்சாரியைபெற்று, ஆவினை மாவினை கோவினை எ - ம் வருமெனக்கொள்க.
(பி - ம்.) 1ஓரிடம்பற்றி | (9) | | | (248) | ஒன்றுமுத1லெட் டீறா மெண்ணூர் பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமேல் எல்லா மோடு மொன்பது மிற்றே. | எ - ன், ஒருசார் எண்பெயர் சாரியைபெற்றுமுடியுமாறு ணர்த்துதல் நுதலிற்று | |
|
|