(இ - ள்.) ஒன்றுமுதல் எட்டுஈறாம் எண்களோடுவரும் பத்தென்னுமெண்முன்னர் ஆனென்னுஞ்சாரியைவரிற் பத்தென்னுமொழியிற் பகரவொற்றொழிய மேல்நின்ற எல்லாம்கெடும்; 2ஒன்பதென்பதன்முன்னும் ஆன்வரின் பகரவொற்றொழிய மேல்நின்ற எல்லாம் கெடும் எ - று.
வ - று. ஒருபானை, இருபானை, ஒன்பானை எனவரும்.
(பி - ம்.) 1லெட்டளவாம் 2ஒன்பதன்முன்னும் |
(10) |
| | (249) | வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே. |
எ - ன், ஒருசாரன சாரியை பெறுமாறுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) வகரவீறாயுள்ள மூவகைச் 1சுட்டிற்கும் அற்றுச் சாரியை வருதல் முறைமை எ - று.
வ - று. அவற்றை, இவற்றை, உவற்றை, அவற்றுக்கண் என2 வரும்.
‘வழி’ என்றமிகையான், இவற்றிற்கு இச்சாரியை வந்தாலும், *முதன்முச்சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் 3இச்சாரியைவந்து வகர மெய் பெற்றாலும் தனிக்குறின்முன் ஒற்று இரட்டாவாறுகொள்க.
(பி - ம்.) 1சுட்டிற்குமுன்னும் 2 ‘பதமுன்விகுதியும்.....ஆகும்’ என்பதனான்வரும் 3இச்சாரியைவந்தால் இடையில் வகரவுடம்படுமெய் பெறுமென்பார்க்கும் அவை தனிக்குறின்முன்ஒற்று உயிர்வர இரட்டாமற்கொள்க |
(11) |
| | (250) | சுட்டின்முன் னாய்த மன்வரிற் கெடுமே. |
எ - ன், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.
(இ - ள்.)மூவகைச்சுட்டின்முன்னுமுள்ள ஆய்தம் அன்சாரியை வரிற் கெடும் எ-று.
வ - று. அதனை, இதனை, உதனை எனவரும். |
(12) |
| | (251) | அத்தி னகர மகரமுனை யில்லை. |
எ - ன், அத்துச்சாரியைக்கு ஆவதோர் விதியுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இயல்பானும் விதியானும்நின்ற அகரத்தின்முன் வந்த அத்துச்சாரியையின் அகரம் கெடும் எ - று.
வ - று. மகத்துக்கை, மரத்துக்குறை என இரண்டகரக் கண்ணும் 1கெட்டது.
(பி - ம்.) 1முன்வந்த அத்துச்சாரியையின் அகரம் |
(13) |
| | (252) | இதற்கிது சாரியை யெனி1னள வின்மையின் விகுதியும் பதமு முருபும் பகுத்திடை நின்ற வெழுத்தும் பதமு மியற்கையும் ஒன்ற 2வுணர்த்த லுரவோர் நெறியே. |
* தொல்காப்பியம், உருபியல், ஐந்தாஞ்சூத்திரம், இளம்பூரணருரையைப்பார்க்க. |