எ - ன், சாரியைக்கு ஆவதோர் புறநடை யுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இச்சொற்குச் 3சாரியையிதுவென்று சொற்றொறும் சாரியை 4சொல்லுதலுறின், அளவின்றிப் 5பெருகலின், நிலைப்பதத்தையும் அதன்வழி 6வருமுறையவான விகுதியே பதமே உருபே யென்றிவற்றையும் பிரித்து இரண்டற்கும் இடையிற் பொருத்தமுடைத்தாய்நின்ற எழுத்துச் சாரியையே, மொழிச்சாரியையே, இயல்பேயென்றவற்றுள் இன்னது நின்றதென்று பொருந்தும்படியறிந்து உணர்த்துதல் புலவரது முறைமை எ - று.
வ - று. உண்டதென்பதனை, உண் ட் அ து எனப்பிரித்து அகரஎழுத்துச்சாரியைவந்ததெனவும், உண்கின்றனனென்பதனை உண்கின்று அன் அன் எனப்பிரித்து மொழிச்சாரியைவந்ததெனவும், உண்டானென்பதனை உண் ட் ஆன் எனப்பிரித்துச் சாரியைவாராது இயல்பாய்வந்ததெனவும் பகுதிவிகுதிகட்கு இடையே இருசாரியையும் இயல்புமானவாறுகாண்க. “ஆனமணி யியம்புங் கானத் தான” என்பதனை, ஆன் அ மணி...........தான எ - ம், “ஆனநெய் 7தெளித்து” என்பதனை, ஆன் அ நெய் 8தெளித்து எ - ம், ஒன்றேகால் என்பதனை ஒன்று ஏ கால் எ - ம், கலனேகுறுணி என்பதனை கலன் ஏ குறுணி எ - ம், கலனேதூணி என்பதனை கலன் ஏ தூணி எனவும் பிரித்து எழுத்துச்சாரியைவந்ததெனவும், புளியங்காயென்பதனை. புளி அம் காய் எ - ம், வண்டின்காலென்பதனை, வண்டு இன் கால் எ - ம் பிரித்து மொழிச்சாரியை வந்ததெனவும், ஆமணிஎன்பதனை, ஆ மணி எனப்பிரித்துச் சாரியைவாராது இயல்பாய்வந்ததெனவும் இருபதங்கட்கு மிடையே இருசாரியைகளும் இயல்பும் ஆனவாறுகாண்க. ஆனையென்பதனை, ஆ ன் ஐ எ - ம், அவற்றை யென்பதனை அவ் அற்று ஐ எ - ம். 9மாலை என்பதனை மால் ஐ எ - ம் பிரித்துப் பதவுருபுகட்கிடையே இருசாரியையும் இயல்புமானவாறு காண்க. இவ்வாறே எடுத்தோதாத சாரியைகளெல்லாம் எடுத்து முடிக்க.
(பி - ம்.) 1அளபின்மையின் 2உணர்த்துதல் 3சாரியையாமிது. 4சொல்லலுறின் 5பெருத்தலின் 6வருவனவான 7தெளிந்தது 8தெளிந்தது 9மாவை என்பதனை மா ஐ எனவும் | (14) | | (253) | விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும் உரைத்த 1விதியினோர்ந் தொப்பன கொளலே. | எ - ன், 2எனைவகைப்புணர்ச்சிக்கும் 3ஏற்பதோர் கருவியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) விகுதியே பதமே சாரியையே உருபே யென் 4றிவ்வெல்லாவற்றின்கண்ணும் ஓரிடத்துச்சொன்ன விதியையோர்ந்து அவற்றிற்குப் பொருத்தமுடையன விசாரித்தறிந்து புணர்க்க எ - று.
இஃது 5என்னை சொல்லியவாறோவெனின், விகுதிபுணர்ப்புழிச்சொன்ன பகுதியீற்றழிவுமுதலானவை பதப்புணர்ச்சி முதலானவற்றிற்கு வரவும், பதப்புணர்ச்சிக்கட்சொன்ன இயல்பே விகாரமே யென்றவை ஒழிந்த மூவிடத்துவரவும், உருபுபுணர்ச்சிக்கட் சொன்ன | |
|
|