(இ - ள்.) அன்னமும் பசுவும்போல்வார் தலைமாணாக்கர்; 1மண்ணும் கிளியும்போல்வார் இடைமாணாக்கர்; இல்லிக்குடம், ஆடு, எருமை, பன்னாடைபோல்வார் கடைமாணாக்கர். எ - று. இவரியல்பு விரித்துரைத்துக்கொள்க. (பி - ம்.) 1பசுமண்ணும் |
| (37) |
| கற்பிக்கப்படாதோர் |
| | (38) | களிமடி மானி காமி கள்வன் பிணிய னேழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் றென்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் றறுகணன் பாவி |
| 5 | படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. |
(இ - ள்.) 1இவர் கற்பிக்கப்படாமாணாக்கர் எ - று. (பி - ம்.) 1இவர்கள். |
| (38) |
| 5. பாடங்கேட்கும்முறை |
| (39) | கோடன் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று 1வழிபடன் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் |
| 5 | பருகுவ னன்ன வார்வத்த னாகிச் சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை 2கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர். |
(இ - ள்.) இது நூல்கேட்குமியல்பு எ - று. (பி - ம்.) 1வழிபட 2கேட்பவை |
| | |
| பயிற்சி |
| (40) | நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் *ஆசாற் சார்ந்தவை 1யமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் |
| 5 | வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை கடனாக் கொளினே 2மடநனி யிகக்கும். |
* இவ்வடி சிலபிரதிகளிலில்லை. |
|