110

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
சாரியை முதலானவை ஏனைமூன்றிடத்து வரவும்பெறும். அவை ஆங்காங்கு
எடுத்துச்சொல்லுவான்புகிற் 6பெருகுதலிற் சுருங்குதற்பொருட்டுப் பொதுப்படக்
கூறினாரெனக்கருதி அவ்விடங்கட்கு வேண்டுவன அறிந்து வருவித்துப்புணர்க்க வென்க.

     வ - று. கரியானென்னும் பகுபதமுடிப்புழிப் பண்புப்பகுதி ஈறுகெடுமெனக்கூறினார்;
அதனானே கருநீலமெனப் 7பதமுடிப்புழியும் கெடுக்க. புளியங்காயெனப் பதமுடிப்புழி,
உருபுபுணர்ச்சிக்கட் சொன்ன சாரியை வருதலும், சாரியையீற்றுமகரம் மகரவீற்றுப்
புணர்ச்சிபோலத் திரிதலும் கொள்க. உருபுபுணர்ச்சிக்கண் நீயென்பது
நின்னெனநிற்குமென்றார்; அவ்வாறே பொருட்புணர்ச்சிக்கண்ணும் நின்கையெனப்
புணர்க்க. இவ்வாறே பிறவும் வருவித்துக்கொள்க.

     ‘ஓர்ந்து’ என்பது ஏற்புழிக் கோடற்கென்க.

     (பி - ம்.) 1 விதியுளோர்ந் 2 எவ்வகை 3 (1) ஒப்பதோர் (2) இயைவதோர்4
இவையெல்லா 5 (1) என்ன; (2) என் 6 பெருத்தலிற் 7 பதம்புணர்ப்புழியும்

(15)

(254)

இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும்
உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன பிறவு மாகுமை யுருபே.

     எ - ன், ஐகாரவேற்றுமைத்திரிபு தொகுத்துணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வாறு வரப்பெறும், ஐகாரவேற்றுமை; உருபினும் பொருளினும் எ-று.

     வ - று. இயல்பின்விகாரமாவது, “வழிபடு தெய்வ நிற்புறங்காப்ப” (தொல். செய்.
110) என்பது. விகாரத்தியல்பாவன, மண்கொணர்ந்தான் பொன் கொணர்ந்தானென்பன.
உயர்திணையிடத்துவிரிந்துநின்றன, நம்பியைக்கொணர்ந்தான்
நங்கையைக்கொணர்ந்தானென்பன. உயர்திணையிடத்துத் தொக்குவந்தன, மகற்பெற்றான்
மகட்பெற்றானென்பன. விரிவுப் பெயரின்விரிந்துநின்றன, கொற்றனைக்கொணர்ந்தான்
கொற்றியைக் கொணர்ந்தானென்பன.

     ‘அன்னபிறவும்’ என்றதனால், 1வில்லைக்கொள் வில்கொள் விற்கொள்
என்பனபோல்வனவுங் கொள்க.

     (பி - ம்.) 1ஆடூஉவறிசொல் (தொல். கிளவி. 2), மகடூஉவறிசொல், வில்லைக்கொள்.

(16)