| (255) | புள்ளியு முயிரு மாயிறு சொன்முன் தம்மி னாகிய தொழின்மொழி வரினே வல்லினம் விகற்பமு மியல்பு மாகும். | எ - ன், மூன்றாம் 1வேற்றுமைத்தொகைக்கு ஆவதோர்விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒற்றும் உயிரும் ஈறாகியசொன்முன் தம்மினாகிய தொழிற் சொல்வந்தால், வல்லெழுத்து விகற்பமாயும் இயல்பாயும்வரும் எ - று.
வ - று. நாய்கோட்பட்டான், நாய்க்கோட்பட்டான், புலிகோட்பட் டான் புலிக்கோட்பட்டான், வளிகோட்பட்டான், வளிக்கோட்பட்டான்எ - ம், நாய்கௌவப்பட்டான், புலிகௌவப்பட்டான்; சாரப்பட்டான், தீண்டப்பட்டான், பாயப்பட்டான் எ - ம் வரும்.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
(பி - ம்.) 1 (1) வேற்றுமைதொகுத்துணர்த்துதல்; (2) வேற்றுமைத் தொகையுணர்த்துதல் | (17) | | (256) | இதற்கிது 1முடிபென் றெஞ்சா தியாவும் விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே. | எ - ன், இவ்வதிகாரத்துட் சொன்னபொருட்கெல்லாம் ஏற்பதோர் புறநடையுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்வதிகாரத்துட் சொல்லாத எழுத்திலக்கணமாய் வருவனவெல்லாம் இதுவே விதியாக ஈண்டே சொல்லிக்கொள்க எ - று.
வ - று. 2 “உருவே யுணர்வே யொலியே 3 தன்மை, யெனவீ ரெழுத்து மீரிரு பகுதிய.” (1); “காணப் பட்ட வுருவ மெல்லா, மாணக் காட்டும் வகைமை நாடி, வழுவி லோவியன் கைவினை போல, வெழுதப் படுவ துருவெழுத் 4தாகும்” (2); “கொண்டவோர் குறியாற் கொண்டவதனை, யுண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும்.” (3) ; “இசைப்படு புள்ளி னெழாஅல் போலச், செவிப்புல னாவ தொலியெழுத் தாகும்” (4); “முதற்கா ரணமுந் துணைக்கா ரணமுந், துணைக்கா ரணத்தொடு தொடரிய வுணர்வு, மவற்றொடு புணர்ந்த வகத்தெழு வளியின், மிடற்றுப்5 பிறந்திசைப்பது தன்மை யெழுத்தே” (5) (யா - வி. உரை) என்னும் இப்பகுதியுள் ஒலியெழுத்தே செவிப்புலனாய்ப் பொருள்தருஞ் சிறப்புநோக்கி, அதனை எடுத்தோதினார்; ஒழிந்தனமூன்றும் ஈண்டே உரைத்துக்கொள்க. இவ்வாறன்றி “வடிவுபெயர் தன்மை யுண்முடிவு நான்காய், நடைபெறு நாவலர் நாடிய வெழுத்தே”; “கட் 6புல னல்லாக் கடவுளைக் காட்டுஞ், சட்டகம் போலச் செவிப்புல வொலியை, யுட்கொளற் கிடுமுரு பாம்வடிவெழுத்தே”; “வடிவுமுதன் மும்மையின் வழங்கு மெழுத்திற், படுபல பகுதிக் கிடுபெயர் பெயரே.”; “தான முயற்சி 7தரக்கொளச் | |
|
|