112

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
செவிப்புல, னாயவொலி தன்மை யெழுத்தா கும்மே”; “உருபு முதன் மும்மையோ
டொன்றிய வியல்பை, மரு8வுளந் துணிவுற வருமுடி பெழுத்தே.” இவ்வாறு
பகுத்துரைக்கப்படும் எழுத்துக் கூறுபாடும், போயினான் சொல்லினானென
வருஞ்சொற்கள், இறந்தகாலந்தரும் இன்னிடை நிலைபெறாது, போனான் சொன்னான்
எனவருவனவும், புக்கான் நக்கான்முதலானவும், வாரியோள் வாருங்கோள் வந்தியோள்
9வாருங்கிடீர் என்றற்றொடக்கத்துக் காலவழக்காய் வருவனவுமான பதத்தின்கூறும்,
இந்தவனந்தல், குளாம்பல், மராடி, 10செங்கழுநீர் என்றற் றொடக்கத்துப் புணர்ச்சிக்கூறும்
இவைபோல்வனபிறவும் இதுவே நிலனாகத் தந்துமுடிக்க.

     (பி - ம்.) 1 முடிவென்று 2 உருபே 3 தன்மையென, விருவகையெழுத்து
மீரிரண்டாகும் 4 ஆமே 5 பிறப்பது 6 புலனில்லாக் 7 (1) தரக்கொளல், (2) தரக்கோள்
8 உளத்துணிவருமுண்முடிபு 9 (1) வருங்கெடீர்; (2) வாருங்கடீர் 10 (1) செங்கழநீர்; (2)
செங்கழனி

(18)

ஐந்தாவது உருபுபுணரியல் முற்றிற்று.
 

கட்டளைக் கலித்துறை
 

“அடையெண் பெயர்முறை தோற்றம் வடிவள வாதியந்தம்
இடைநிலை போலியென் றீரைந் தெழுத்து மிருபதமும்
படுபுணர் 1மூன்றி னியல்பும் விகாரமுஞ் சாரியையும்
உட2னுணர் வாரை யெழுத்தறி வாரென்ப ருத்தமரே.”

     (பி - ம்.) 1 மூன்று மியல்பும் 2 னறிவாரை
 

வெண்பா
 

“எழுபா னிரண்டெழுத்தி னேற்றபதத் தைஞ்ஞான்
கொடுமூன் றுயிரீறைம் பான்மூன் - றருமெய்யீ
றாறா றுருபியன்மூ வாறா மெழுத்துரைநூற்
பாவிருநூற் றோரிரண்டாப் பார்.”


முதலாவது,

எழுத்ததிகாரம் முற்றிற்று.