இரண்டாவது

சொல்லதிகாரம்

முதலாவது

பெயரியல்
 

 

(257)

முச் 1சக நிழற்று முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே.
     என்பது சூத்திரம்.

     இவ்வதிகாரம் என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின், அதிகாரம்
நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வதிகாரம்
என்ன பெயர்த்தோவெனின், சொல்லிலக்கண முணர்த்திற்றாதலாற்
சொல்லதிகாரமென்னும் பெயர்த்து. சொல்லப்படுதலாற் சொல்லெனக்கொள்க.
மேலதிகாரத்தோடு இதற்கு இயைபு என்னையோவெனின், அது வருஞ்சூத்திரத்தானே
விளங்கும்.

     இவ்வதிகாரத்துள், ஏனைவகையோத்தினாற் சொல்லிலக்கணம்
உணர்த்தினானோவெனின், ஐவகை 2யோத்தினான் உணர்த்தினானென்க.

     அவற்றுள், இம்முதலோத்து என்னுதலியதோவெனின், ஓத்துநுதலிய தூஉம்
ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து
என்னபெயர்த்தோவெனின், பெயர்ச்சொற்களது இயல்பு உணர்த்திற்றாதலாற்
பெயரியலென்னும் பெயர்த்து.

     இவ்வோத்தினுள், இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஒரு
சாரார்வேண்டும் சிறப்புப்பாயிரம் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இம்மூன்றுலகத்திலுள்ள உயிர்கட்கெல்லாம் நிழலைப் பண்ணாநின்ற
நிறைந்த மதியைப்போன்ற மூன்றுகுடையையுடையனான கேடில்லாதானுடைய
அடிகளைவணங்கிச் சொல்லிலக்கணத்தை யான் சொல்லுவேன் எ - று.

     அகலம் உரையிற்கொள்க.

     அஃதேல், ஒருநூலுக்கு எடுத்துக்கோடற்கண்ணே வணக்கஞ் சொல்லுதலன்றி
அதிகாரந்தோறும் சொல்லவேண்டியது 3யாதோவெனின், நூலொன்றேயெனினும்
அதிகாரங்கள் பொருளான் வேறுபடுதலானும்