114

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
முன்னை ஒருசாரார் ஒரோவதிகாரத்தை ஒருநூலாக்கிப் பாயிரமுழுதும் பகர்தலானும்,
“ஆதியு மந்தமு நடுவு மங்கலம், ஓதிய முறைமையினுரைப்ப ராயிடின், ஏதமி லிருநிலக்
கிழத்தி யின்புற, நீதியம் பனுவல்க ணிலவு மென்பவே” என்பவாகலானும்,
‘கற்றதனாற்பயன், குற்றமற்று முற்றவுணர்ந்த ஒற்றைநற்றவன்,
பொற்றாளிணைமலர்போற்றல்’ ‘என்பவாகலானும் சொன்னாரெனக்கொள்க.

     (பி - ம்.) 1செகம் 2யோத்தினானென்க. 3என்னையோவெனின் 4என்பதனானும்
சொன்னாரென்க.

(1)

(258)

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா
இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும்
மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே.

     எ - ன், சொல்லின்கூறுபாடும் அதனியல்பும் உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) ஒருமொழியும் தொடர்மொழியும் பொதுமொழியுமென்னும்
இக்கூற்றினதாகி இருதிணையையும் அவற்றினது கூறுபாட்டான்வரும்
1ஐம்பாற்பொருளையும் தன்னையும் மூன்றிடத்தினும் வழக்கின்கண்ணும்
செய்யுளின்கண்ணும் வெளிப்படையானும் குறிப்பானும் விளக்குவது, சொல்லாவது எ-று.

     எனவே உலகத்து உயிர்ப்பொருள், உயிரில்பொருள், இயங்கியற் பொருள்,
நிலையியற்பொருள், காட்சிப்பொருள், கருத்துப்பொருள், முதற்பொருள், சினைப்பொருள்,
இயற்கைப்பொருள், செயற்கைப்பொருள், வழக்குப்பொருள், 2செய்யுட்பொருளென்று
இவ்வாறு பகுத்துரைக்கப்படும் பொருள்களெல்லாம் இருதிணை ஐம்பாலாய்
அடங்குமென்பதூஉம், இவற்றைச் சொல்லுஞ்சொல்லும், ஒருமொழி தொடர்மொழி
பொதுமொழியெனவும் உயர்திணைச்சொல் அஃறிணைச்சொல் ஆண்பாற்சொல்
பெண்பாற்சொல் பலர்பாற்சொல் ஒன்றறிசொல் பலவறிசொல் தன்மைச்சொல்
முன்னிலைச்சொல் படர்க்கைச்சொல் வழக்குச்சொல் செய்யுட்சொல் வெளிப்படைச்சொல்
குறிப்புச்சொலெனவும் வருங்கூறுபாட்டதாமென்ப தூஉமாயிற்று. இன்னும் இதனானே,
மேல் எழுத்ததிகாரத்துள் அணுத்திரள் முதற்காரணமாகப் பிறந்து மொழிக்கு
முதற்காரணமாகிவந்த பலவொலி எழுத்தாமென்றும், அது தனியேநின்றும்
தொடர்ந்துநின்றும் பொருளைத் 3தோற்றுவித்தலிற் பதமாமென்றும் போதந்தார்;
ஈண்டும் அப்பதம்படு பகுதியும், அவை தோற்றுவிக்கும்பொருள் இவையென்பதூஉம்
4சொன்னவாறுமாயிற்று. ஆகவே எழுத்தோடு சொற்றொடர்ச்சியும் அதிகாரத்
தொடர்ச்சியும் தாமேவிளங்கினவெனக்கொள்க. அவ்வகையால் நோக்க ஆரியத்திற்போல
வேறு எழுத்ததிகாரமென்று பிரிக்க வேண்டாமையும் போதரும். இது
தொகைச்சூத்திரமாகலின், இதன் பொருள்வகைமை யெல்லாம் தத்தம்
வகைச்சூத்திரத்தான் அறிந்துகொள்க. “கடியென்