1. - பெயரியல்

115

   
கிளிவி” (தொல். உரி. 85), “5கழுமென்கிளவி” (தொல். உரி. 53), ‘புனி றென்கிளவி”
(தொல். உரி. 77) எனச் சொல் தன்னைத்தான் விளக்கின வாறு. உயிருணர்வுகள்
தம்மையும் பொருளையும் உணர்த்துமாறுபோலச் சொல்லும் தன்னையும் பொருளையும்
உணர்த்துமெனக்கொள்க; “வயிரவூசியு மயன்வினை யிரும்பும், செயிரறு பொன்னைச்
செம்மைசெய் யாணியும், தமக்கமை கருவியுந் தாமா மவைபோல், உரைத்திற
முணர்த்தலு முரையது தொழிலே” என்றார், ஆசிரியர் அகத்தியனாருமெனக் கொள்க.
சொல் பொருளையுணர்வார்க்குக் கருவியாவதன்றித் தானாக நின்று பொரு
ளுணர்த்தாதென்க.

     (பி - ம்.) 1ஐம்பாலுமாகிய பொருளையும் 2மெய்ம்மைப்பொருள் 3தோற்றலிற்
4சொன்னவாறாம் அற்றாகவே 5துனியென்கிளவி
 
 

(259)

ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர்மொழி
பலபொரு ளனபொது விருமையு மேற்பன.

     எ - ன், மேற்சூத்திரத்தில் நிறுத்தமுறையானே சொற்கூறாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) ஒருமொழிகளாவன பகுப்பிலவாய்நின்று ஒருபொருளை
உணர்த்துவனவாம்; தொடர்மொழிகளாவன இரண்டும் பலவுமான மொழிகள்
தொகைநிலைவகையானும் தொகாநிலைவகையானும் தொடர்ந்து நின்று
பலபொருளையுணர்த்துவனவாம்; பொதுமொழிகளாவன ஒன்றாய் நின்று
ஒருபொருளையுணர்த்தியும் அதுவே தொடர்மொழியுமாய்ப் பல பொருளையுணர்த்தியும்
இவ்வாறு இருமைக்கும் பொதுவாய் நிற்பனவாம் எ - று.

     வ - று. நம்பி நங்கை சாத்தன் சாத்தி நிலம் நீர் மணி பொன்; வந்தான் வந்தாள்
வந்தார், போனான் போனாள் போனார், வந்தது வந்தன; தில் மன்; தஞ்சம் தவ
என்றற்றொடக்கத்தன ஒரு மொழிகள்.

     இனி, தொடர்மொழியாவது தொடர்ந்தமொழி, தொடரலாவது மொழிகள் தம்முட்
பொருள்நோக்குடையவாதல்; நோக்குடைமையாவது தொகைநிலைவகையானும்
தொகாநிலைவகையானும் தம்முட் பொருள் கொண்டுமுற்றல். அவை யாங்ஙனம்
பொருள்கொண்டு முற்றுமோவெனின், அடை, பொருள்கொண்டு முற்றும்; பொது,
சிறப்புக்கொண்டுமுற்றும்; பெயர், வினையும்பெயரும் வினாவுங்கொண்டு முற்றும்;
தெரிநிலைமுற்றும் குறிப்புமுற்றும் பெயரெச்சமும், 1பெயர்கொண்டுமுற்றும்;
வினையெச்சம், முற்றுவினையும் பெயரெச்சவினையும் தொழிற்பெயரும், சிறுபான்மை
வினையெச்சமுங்கொண்டு முற்றும்; இடைச்சொல்லும் உரிச்சொல்லும் உருபுகளும்,
பெயரும் வினையுங்கொண்டுமுற்றும். அவற்றுள், அடை பொருள்கொண்டு முற்றுமாறு
கருங்குவளையென்பது. பொதுச் சிறப்புக் கொண்டு முற்றுமாறு பார்ப்பான்
பாராயணனென்பது; இவ்வாறே ஒழிந் தனவும் தத்தம் விதிச்சூத்திரங்களுட்காண்க. இனி,
குறிஞ்சிமலர், “குன்றக் கூகை” (குறுந். 153); கொல்யானை, குளிர்மதி; கருங்குதிரை,