116

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
பெருங் குளிர்; குயின்மொழி, மயிலியல்; கபிலபரணர், கைகால்; பொற்றொடி,
புனைகோதை என்றற்றொடக்கத்தன தொகைநிலைத் தொடர்மொழிகள். கொற்றனை,
கொற்றனால், கொற்றற்கு, கொற்றனில், கொற்றனது, கொற்றன்கண்; ஓணனுண்டான்,
கொற்றாகொள், உண்டசாத்தன், உண்டுவந்தான், உண்டானூரன், பூணன்பொன்னன்.
“அதுகொ றோழி காமநோயே” (குறுந். 5), “நனிபே தையே நயனில் கூற்றம்” (புறநா.
227), வந்தேன்வந்தேனென்றற்றொடக்கத்தன, தொகாநிலைத் தொடர்மொழிகள்.

     ஒருசொல்முன் ஒருசொல் 2வருங்கால் தொகைநிலை தொகாநிலையாகிய
இவ்விரண்டன் பகுதிகளுள் 3ஒன்றுபற்றியன்றி வாராதெனக்கொள்க.

     எட்டு, கொட்டு, கொண்மூ, தாமரை, வேங்கை, குறுஞ்சூலி, ஆனை வணக்கி,
முயன்மோவாய், முதியாள்கூந்தல், சிறியாணங்கை, எழுந்திருந்தான், வாராநின்றான்,
உரைத்திட்டானென்றற்றொடக்கத்தன, 4பகாது நின்று ஒருபெயரும் வினையுமாய்
ஒருபொருளை யுணர்த்தினவெனலுமாய், அவ்வாறன்றி, எள்ளைத்து, கொள்ளைத்து,
கொள்ளைமூ, தாவுகின்றமரை, வேகின்றகை, 5குறிதாகிய சூலினையுடையவள், ஆனையை
வணக்குவான், முயலினதுமோவாய், முதியாளது கூந்தல், சிறியாளாகிய நங்கை, எழுந்து
பின்இருந்தான், வந்துபின் நின்றான், உரைத்துப் பின் இட்டானென இவ்வாறுபகுப்பப்
பலபொருளை யுணர்த்தினவெனலுமாய் நிற்றலாற் பொதுமொழிகள். வெற்பன்,
பொருப்பன், குழையன், கரியனென்றற் றொடக்கத்தன பலபொருளுணர்த்தின வெனினும்,
அவை தொடர்மொழிகளாகா; பகுபதமாமென்க. பகுபதத்திற்கும் தொடர்மொழிக்கும்
தம்முள் வேற்றுமை மேலையதிகாரத்துட் (சூ. 5, உரை) பதவியலுட்காண்க. சேனை,
குழாம், தொறு, பல, பலர், சில, சிலர், வந்தார், வந்தனவென்பனவும்
6பொருள்பலவேனும் பொருளியைபாகிய 7ஒருபொருளை உணர்த்தலான்
ஒருமொழியேயாமென்க; “பலவி னியைந்தவு மொன்றெனப் படுமே, அடிசில்
8பொத்தகஞ் சேனை யமைந்த, கதவ மாலை கம்பல மனைய” என்றார் ஆசிரியர்
அகத்தியனாரு9மெனக் கொள்க.

     இதற்கு இவ்வாறன்றி, ஒருமொழியாக, தொடர்மொழியாக ஒருபொருளைத் தருவன
ஒருமொழி; பலபொருளைத் தருவன 10தொடர்மொழி; ஒரு பொருளதாகக்கொள்ளவும்
பலபொருளதாகக் கொள்ளவும் வருவன பொது மொழியென்றுமாம். அவன், சாத்தன்,
கொற்றன், நிலம், நீர்; வந்தான், சென்றான், வந்தது, நின்றது; தில், மன்; தஞ்சம், தவ
என்றற்றொடக்கத்தன தனியேநின்று ஒருபொருள்தந்த ஒருமொழிகள். அவர்கள், பலர்,
சிலர், அவை, பல, சில, சேனை, குழாம், தொறு, வந்தன,
போயினவென்றற்றொடக்கத்தன தனியேநின்று பலபொருள்தந்த 11தொடர்மொழிகள்.
அவர், அரசர், வந்தார் என்றற்றொடக்கத்தன ஒருவரை உயர்த்துச்சொல்லியவழி
ஒருமொழியெனலுமாய்ப் பலரை நுதலியவழித் தொடர்மொழியெனலுமாய் நிற்றலின்,
தனியேநின்ற பொதுமொழிகள். சேரன் திருமணக்குட்டுவன், சோழன்
கரிகாற்பெருவளத்தான், பாண்டியன் நெடுஞ்செழியன் என்றற்றொடக்கத்தன
தொடர்மொழியாய் நின்று ஒருபொருள் தந்த ஒருமொழி. கொற்றிமகன்,