(குறுந். 153), உவாப்பதினான்கு, பதினொன்று என்றற்றொடக்கத்தன தொடர்மொழியாய்நின்று பலபொருள்தந்த தொடர் மொழித்தொடர்மொழிகள். எட்டு, கொட்டு, கொண்மூ, வேங்கை என்றற் றொடக்கத்தன தொடர்மொழியாய்நின்று பல பொருள்தந்த எனலுமாய், ஒரு மொழியாய்நின்று ஒருபொருள்தந்த எனலுமாய்நின்ற தொடர்மொழிப் பொதுமொழிகள். இவ்விருதிறமும் அறிந்துகொள்க.
இவ்வாறுநோக்கப் பொருளானே சொற்குக் குறியிட்டவாறும் ஆயிற்றென்க.
(பி - ம்.) 1பெயரைக்கொண்டு 2வருங்காலத்து 3ஒன்றன்றிவாரா 4பகாதுபொதுநின்று 5குறிதாகச்சூலுவது 6பலபொருளினவேனும் 7ஒரு பொருண்மையுணர்த்தலான் 8புத்தகம் 9மென்க; இவ்வாறன்றி 10பலமொழி ஒருபொருட்டாகக்கொள்ளவும் பலபொருட்டாகக்கொள்ளவும் 11ஒருமொழித் தொடர்மொழிகள் | (3) | | (260) | மக்க டேவர் நரக ருயர்திணை மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை. | எ - ன், மேல் ‘இருதிணை’ என்றார், அவை இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மக்களும் தேவரும் நரகரும் 1உயர்திணையாம்; அவரை ஒழித்துநின்ற ஊர்வன தவழ்வன தத்துவன நடப்பன பறப்பன நிற்பனவான விலங்காதி உயிருள்ளனவும் 2நீர் வளி தீ என்றற்றொடக்கத்து உயிரில்லனவுமான காட்சிமுதற்பொருளும், அணு உயிர் ஆகாயமென்றற் றொடக்கத்துக் கருத்துமுதற்பொருளும், கோடு சினை தோல் பூ மெய் வாய் கண் மூக்குச் செவி 3ஓசை நாற்றம் ஒளி சுவை ஊற்றுத்தொடக்கத்துக் காட்சிச் சினைப்பொருளும், உணர்தல் காண்டல் செய்தல் துய்த்தற் றொடக்கத்துக் கருத்துச் சினைப்பொருளுமாகிய எல்லாப்பொருளும் அஃறிணையாம் எ - று.
4உயரென்பது மிகுதி; திணையென்பது பொருள்; உயர்ந்த திணை உயர்திணையென வினைத்தொகை. உயர்திணையல்லாததிணை அஃறிணை; இழிதிணையென்றவாறு. இது பண்புத்தொகை. ஆண்பாலும் பெண்பாலு மடங்குதற்கு மக்கள் தேவர் நரகரெனக் கதிமேல்வைத் தோதினாரென்க. தேவரை முன்வையாது இவ்வாறு வைத்தகாரணம் என்னையோவெனின், மக்களுட்பிறந்தே தானமும் தவமுமியற்றி வானமும் வீடும் எய்தற்சிறப்பினான், முன்னே மக்களையும், அவ்வாறல்லது எய்தற்கு அருமைச்சிறப்பினான் அவர்பின்னே தேவரையும், தீவினையால்வருதலிழிபினான் அவர்பின்னே நரகரையும் வைத்தாரென்க. இன்னும் மானிடமென்பதும், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி கதிர் மதி திரு என்றற்றொடக்கத்து 5வாய்பாட்டான் வரும்பெயர்களும் அஃறிணைமுடிபினவாமென்றற்கும் அவ்வாறு வைத்தாரெனக்கொள்க.
வ - று. மகன்வந்தான், மகள்வந்தாள், மக்கள்வந்தார்; தேவன் வந்தான், தேவிவந்தாள், தேவர்வந்தார்; நரகன்வந்தான், நரகிவந்தாள், | |
|
|