| 118 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | நரகர்வந்தாரென்பன உயர்திணை. யானைவந்தது, யானைகள்வந்தன; மரம் வளர்ந்தது, மரங்கள்வளர்ந்தன; நீர்வந்தது, நெருப்பெழுந்தது என்றற்றொடக்கத்தன அஃறிணை.
(பி - ம்.) 1உயர்திணை; உவரையொழிந்துநின்றன 2நிலம் நீர்தீ 3முதலாகியஓசை 4உயர்வென்பது 5வாய்பாட்டாற்கொண்டு முடிபேற்றலின் | (4) | | | (261) | ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை. | எ - ன், மேல் ‘ஐம்பால்’ என்றுபோதந்தார், அவற்றுள் உயர்திணை இனைத்துப்பாலுடைத்தென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) 1ஆணே பெண்ணே பலரேயென்னும் இம்மூன்று கூற்றையுமுடைத்து, உயர்திணை எ - று.
எனவே இருதிணையுமொழிய ஐம்பாலென்று வேறுபொருள் இல்லை யென்பதூஉம் இவை உயர்திணைப்பாலென்பதூஉமாயிற்று. அஃதேல், ஆணொருமையும் பெண்ணொருமையும் ஆண்பன்மையும் பெண்பன்மையும் இவ்விருவரது பன்மையுமெனப் பால் ஐந்தாகற்பாற்றெனின், அம்மூவர் பன்மையும், வந்தார் சென்றாரென்னும் ஓரீற்று வாய்பாடே கொண்டு முடிதலிற் பன்மையென ஒன்றாய் அடங்குமென்க. ஆண்பெண்ணென்பன அஃறிணைக்கும் ஒக்குமேயெனினும் அவ்விரண்டிற்கும் அஃறிணைக்கண், 2வந்ததென்பதல்லது வழக்கினுள் வேறு வாய்பாடின்மையின், ஆண்பால் பெண்பாலென்னும் வழக்கு உயர்திணைக்கேயாமென்க.
வ - று. அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார் எனவரும்.
(பி - ம்.) 1ஆண் பெண் பலரென இம்மூன்று 2வந்ததல்லது | (5) | | | (262) | ஒன்றே பலவென் றிருபாற் றஃதிணை. | எ - ன், ஐம்பாலுள் அஃறிணை 1இனைத்துப்பாலுடைத்தென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒன்றும் பலவுமென்னும் ஒருபகுதியையுடையது, அஃறிணை எ - று.
இவையே அஃறிணைப்பாலென்பதூஉமாயிற்று.
வ - று. அதுவந்தது, அவைவந்தன எனவரும்.
(பி - ம்.) 1இத்துணைப்பால் | (6) | | | (263) | பெண்மைவிட் 1டாணவா வுவபே டாண்பால் ஆண்மைவிட் டல்ல தவாவுவ பெண்பால் இருமையு மஃறிணை யன்னவு மாகும். | எ - ன், ஐயமறுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) பெண்ணியல்பினைநீங்கி ஆண்மையினை ஆசைப்படும் பொருள் ஆண்பாலனையவாம்; 2ஆணியல்பினைநீங்கிப் பெண்மையினை ஆசைப்படும்பொருள் பெண்பாலனையவாம். இருவரதுதன்மையும் அஃறிணைப்போலவுமாம், முடிபின்கண் எ-று. | |
|
|