இவையும் மக்கட்கதியினவேனும் அத்தன்மை நிரம்பாமையின், இவ்வாறு 3முடியுமென்க. ஆசைப்படுவனவெனவே அத்தன்மையிலே 4சிறிதுசார்த்தப்படுவனவாய் நிற்பனவென்பதாயிற்று.
வ - று. பேடன்வந்தான், பேடிவந்தாள், பேடர்வந்தார், பேடியர் வந்தார், பேடுவந்தது, பேடுகள்வந்தன எனவரும்.
“அழிதூஉ வகையு மவற்றின் பாலே” என்றார், ஆசிரியர் அவிநயனாரு மெனக்கொள்க.
(பி - ம்.) 1டாணவாவுறுபேடு 2ஆண்மையினை 3முடித்தாரென்க 4(1) சிறிதுஞ்சாரப்படலாய், (2) சார்த்தப்படலாய் | (7) | | | (264) | படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற் பெறப்படுந் திணைபா லனைத்து மேனை இடத்தவற் றொருமை பன்மைப் பாலே. | எ - ன், 1திணையும் பாலும் தெரிதற்கு ஒருகருவி உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) படர்க்கை 2முற்றுவினையானும் படர்க்கைப்பெயரானும் சொல்லுவான்குறிப்பானும் இருதிணையும் ஐம்பாலும் அறியப்படும்; தன்மை முன்னிலைவினைமுற்றுக்களாலும் பெயர்களாலும் ஒருமைப்பாலும் பன்மைப்பாலுமே அறியப்படுவன எ - று.
வ - று. உண்டான், உறங்கினான்; ஓடினாள், பாடினாள்; அயின்றார், துயின்றார் எ - ம், உண்டது, உறங்கிற்று; ஓடின, ஆடின எ - ம் படர்க்கை முற்றுவினையாற் பாலும் திணையும் விளங்கின. அவன், ஒருவன், நமன், மகன், சேர்ப்பன், பார்ப்பான், அம்பர்கிழான் எ - ம், அவள், ஒருத்தி, நமள், மகள், தோழி, நங்கை எ - ம், அவர் மாந்தர், 3மக்கள், பலர், சிலர் எ - ம், அது, யானை, குதிரை எ - ம், அவை, யானைகள், குதிரைகள் எ - ம், படர்க்கைப்பெயர்களால் திணைபால் விளங்கின. இனி, நீவந்தாய், நீவிர் வந்தீர்; யான்வந்தேன், யாம்வந்தேம் என்றக்கால் இருதிணைக்கும் ஆண்பால் பெண்பால்களுக்கும் பொதுவாய்நிற்கும். நீவருதலால் அறிவுபெற்றேன்; நீவருதலால் ஆசாரம்பெற்றேன் என்றக்கால், உயர்திணையென்பதும் ஆண்பாலென்பதும் குறிப்பால் விளங்கும். நீவருதலான் முல்லை அரும்பின; நீயிர்தொக்குநிற்றலான் உடம்பாயிற்று என்றக்கால், மழையும் ஐம்பூதமுமென்பன குறிப்பான் விளங்கும். ஒருவரென்பது இருபாற்கும்பொது. ஒருவரான் அரியதவம்பெற்றேனென்றக்கால், ஆண்பாலென்பதும், ஒருவரால் அரிய மடல்பெற்றேனென்றக்காற் பெண்பாலென்பதும் குறிப்பான் விளங்கும். அறிவும் தவமும் பெண்பாலாற் 4பெறலரியவோ வெனின், “நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே” எனச் சான்றோர் 5சொல்லுபவாகலான் அரியவென்க. உண்டேன், உண்டேம்; உண்டனை, உண்டனிர் எ - ம், யான், யாம், நீ, நீர், நீயிர் எனவும் வரும் தன்மை முன்னிலைவினையும் பெயரும் ஒருமைபன்மை மாத்திரையே விளக்கினவாறுகாண்க. | |
|
|