12

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) இவ்வகையொழுகல் நூல்பயிறலாவது எ - று.
     (பி - ம்.) 1யமைவுற. 2மடனனி.

(40)

(41)

ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே.

(42)

முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.

(43)

ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது 1பற்றல னாகும்.

(44)

அவ்வினை யாளரொடு பயில்வகை 2யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்3விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்.
     (இ - ள்.) 4இவ்வாறொழுகுவர் நூல்கற்பவர் எ - று.
     (பி - ம்.) 1பற்றிலனாகும்; பற்றலவாகும் 2யொருபால் 3விருபாலும் இவ்வாறு
நூல் கற்கப்படுவது; இவ்வாறொழுகல் நூற்கியல்பு.

(41-4)

வழிபாடு

 

(45)

அழலி னீங்கா னணுகா னஞ்சி
நிழலி 1னீங்கா னிறைந்த நெஞ்சமோ
டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே.
     (இ - ள்.) இவ்வாறொழுகல் வழிபாடாவது எ - று.
     (பி - ம்.) 1னீங்கா நிறைந்த

(35)

சிறப்புப்பாயிரம்

 

(46)

ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ 1டாயவெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.

(47)

காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே.
     (இ - ள்.) இப்பதினொன்றும் சிறப்புப்பாயிரமாம் எ - று.
     சிறப்பென்றது ஈண்டு ஒன்றற்கேயுரியதென்றவாறு.
     (பி - ம்.) 1டாயெண்

(46-7)