| 120 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | வினையை முற்கூறினார், பெயரால் திணைபாலறிதல் சிறுபான்மைத் தென்பதூஉம், சாந்தரைக்கும், பூத்தொடுக்கு மென்றற்றொடக்கத்து ஒருசார் வினைகள் ஆண்பால் பெண்பால் விளக்காவென்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க. மேற் பெயர்வினையோத்துக்களிலே திணைபால் விளங்குமேனும் தொகைவகையான் அறிதற்கு ஈண்டு இவ்வாறு சொன்னாரெனக்கொள்க.
(பி - ம்.) 1 (1) திணைபாலிரண்டும்தெரிவதற்கு, (2) திணைபாலையந் தெரிதற்கு2 வினைமுற்றாலும் 3 மைந்தர்மக்கள் 4 பெறலாகாவோவெனின் 5 சொல்லுவராதலானறிக. | (8) | | | (265) | தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே. | எ - ன், முன்னர் மூவிடமென்றார், அவை இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று,
(இ - ள்.) தன்மையும் முன்னிலையும் படர்க்கையுமென்னும் இவை மூன்றிடமாவனவாம் எ - று.
வ - று. யான், யாம், நான், நாமெனவும், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீரெனவும், அவன், அவள், அவர், அது, அவையெனவும் மூவிடப்பெயர் வந்தவாறு. உண்டேன், உண்டேமெனவும், உண்டனை, உண்டனிரெனவும், உண்டனன், உண்டனள், உண்டனர், உண்டது, உண்டனவெனவும் மூவிடவினை வந்தவாறு. | (9) | | | (266) | இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் றாகு மூவகை யியல்பும் இடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் 1வழக்கியல். | எ - ன், மேல் வழக்கின்கண்ணு மென்றார், அஃது இஃதென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இலக்கணநெறியால் வருவதும் 2இலக்கண மன்றெனினும் இலக்கணமுடையதுபோல 3அடிப்பட்ட சான்றோரால் வழங்கப்பட்டுவருவதும் இலக்கணத்திற் சிதைந்துவருவதுமென இம்மூன்றுவகையானும் வரும் இயல்புவழக்கு, இடக்கரடக்கிச் சொல்லுவதும் மங்கலமரபினாற் சொல்லுவதும் ஒவ்வொரு குழுவிலுள்ளார் தத்தம் குறியாக இட்டுச்சொல்லுவதுமென்னும் இம்மூவகைத் தகுதி 4வழக்கினோடுங்கூட ஆறுவகைப்படும், வழக்குநெறி எ - று.
வ - று. நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், சோறு, கூழ், பால், பாளிதம், தெங்கு, கமுகு, மா, பலா, 5மாந்தர், மக்கள், மகன், மகள் என்றற்றொடக்கத்தன இலக்கணமுடையன. இல் முனென்பதனை முன்றிலென்றும், கோவிலென்பதனைக் கோயிலென்றும், பொதுவிலென்பதனைப் பொதியிலென்றும், கண்மீயென்பதனை மீகணென்றும், யாவரென்பதனை யாரென்றும், 6எவனென்பதனை என்னென்றும் இப்பெற்றியான்வருவன இலக்கணப்போலி. அருமருந்தன்னானென்பதனை அருமந்தானென்றும், 7நாட்டு | |
|
|