1. - பெயரியல்

121

   
வியத்தானென்பதனை நாட்டியத்தானென்றும், மலையமானாடு என்பதனை
8மலாடென்றும், சோழநாடு என்பதனைச் சோணாடு என்றும் பாண்டியநாடு என்பதனைப்
பாண்டிநாடென்றும், கிழங்கன்ன பழஞ்சோறென்பதனைக் கிழங்கம்பழஞ்சோறென்றும்,
மட்கட்டியென்பதனை மண்ணாங் கட்டியென்றும், பொற்கட்டியென்பதனைப்
பொன்னாங்கட்டியென்றும் வருவனவும் இவ்வாற்றான் வருவனபிறவும் மரூஉமொழி.

     இவற்றுள் இலக்கணப்போலி அடிப்பாட்டிற்றிரிக்கப்9படா; தாமே யாய்நிற்கும்;
முன்றிலெனவும், கோயிலெனவும்வரும். மரூஉமொழி இலக்கணத்தானும் சிதைவானுஞ்
சொல்லப்படுவன; அருமருந்தன்னான் அருமந்தானென வரும். இவையே இரண்டற்கும்
தம்முள்வேற்றுமை யென்றறிக.

     கண்கழீஇவருதும், கான்மேல்நீர்பெய்துவருதும், வாய்பூசிவருதும்,
அந்திதொழுதுவருதும், கைகுறியராயிருந்தார், பொறையுயிர்த்தாரென்றற் றொடக்கத்தன
இடக்கரடக்கல். இவை செய்யுளகத்தும், “புலிநின்றிறந்த நீரல்லீரத்து” எ - ம்,
  “கருமுகமந்தி செம்பினேற்றை” எ - ம் வரும். செத்தாரைத் துஞ்சினாரென்றும்,
ஓலையைத் திருமுகமென்றும், காராட்டை வெள்ளாடென்றும், இடுகாட்டை
நன்காடென்றும், பிறவும் இவ்வாற்றான் வருவன மங்கல மரபினான்வருவன.
பொற்கொல்லர் பொன்னைப்பறியென்றும், வண்ணக்கர் 10சாணத்தை நீலமென்றும்,
யானைப்பாகர் ஆடையைக் காரையென்றும், 11வேடியர் கள்ளைச்
சொல்விளம்பியென்றும், 12இழிசினர் சோற்றைச் சொன்றியென்றும், பிறவும் இவ்வாறு
வருவனவெல்லாம் குழூஉக்குறி.

     இவற்றுள், முதன்மூன்றும், ஒருகாரணமின்றியே இயல்பாய்வருத லின்
இயல்புவழக்கென்றாயின. ஏனைமூன்றும், அவ்வாறன்றி உயர்ந்தோரும் இழிந்தோரும்
இவ்வாறுமொழிவது தக்கதென்று கொண்டு வழங்குதலின், தகுதிவழக்கென்றாயின.

     (பி - ம்.) 1வழக்கே. 2இலக்கணமின்றேனும் 3உட்பட்டசான்றோரால்4
வழக்கொடுகூட்ட 5மரம் தாய் மக்கள் 6 யானென்பதனை என்னென்றும்7
நாட்டுவித்தானென்பதனை நாட்டிவித்தானென்றும் 8 மலைநாடென்றும் 9 படாதமையாய்
10 (1) காணத்தை; (2) காரத்தை 11 வேடர் 12 இழிசீனர்

(10)

 

(267)

பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின்
வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்.

     எ - ன், மேற்செய்யுளென்றார், அஃது இஃதென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பல்வகைப்பட்ட தாதுக்களினான் உயிர்க்கிடனாக இயற்றப்பட்ட
உடம்புபோலப் பல்வகைச்சொற்களானும் பொருளுக் கிடனாகத் தங்களறிவினாற்
கற்றுவல்லோர் அலங்காரந்தோன்றச் செய்வன, செய்யுளாம் எ - று.