122

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     பலசொல்லாவன: பொருளாதி அறுவகைப்பெயர்களுள், ஒரு பொருள்குறித்த பல
சொல்லாகியும் பலபொருள்குறித்த ஒருசொல்லாகியும் வரும் பெயர்த்திரிசொற்களும்,
பவ்வீறும் மாரீறுமான படர்க்கைமுற்றும், அல் அன் என் ஏன் கு டு து று அம் ஆம்
எம் ஏம் கும் டும் தும் றும் என்னுமீற்றுத் தன்மைமுற்றும், ஐயும் இய்யும்
மின்னுமாமீற்றுமுன்னிலை முற்றும், ககார யகார ரகாரவீற்று வியங்கோண்முற்றும்,
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர், வான்,
பான், பாக்கு என்னும் வினையெச்சமும், ஒழிந்த ஈறுகளான்வரும் 1வினைத்
திரிசொற்களும், இடைத்திரிசொற்களும், உரித்திரிசொற்களும், ஆனும் ஒடுவும் இன்னும்
ஆதுவும் அவ்வும் பின் முன் இல்லென்னும் மூன்று மொழித்தொழிந்த கண்முதலான
எல்லா ஏழனுருபுமான இவ்வுருபீற்று மொழிகளும், வலித்தன்முதலான
விகாரமொழிகளும், 2தொகைநிலைமொழிகளும் “ஆடாவடகு” (திணைமா. 4),
“தீத்தீண்டுகையார்” (திணைமா. 5), என்பனமுதலான குறிப்புமொழிகளும்,
“பறவாக்குளவி” (காட்டுமல்லிகை), “பாயாவேங்கை” (வேங்கைமரம்) முதலான
வெளிப்படைமொழிகளும், மூன்றிறந்த அடுக்குமொழிகளும், எழுத்ததிகாரத்துட்
செய்யுட்கென்று வியந்தோதினவு முதலான செய்யுட்சொற்களும், இவையல்லா வழக்குச்
சொற்களும், திசைச்சொற்களும், வடசொற்களுமெனக்கொள்க.

     எனவே, சொல் எழுத்தாற் பெறப்படுதலின், எழுத்துச் சொற் பொருள்
அணியென்னும் நான்கினும்நடப்பது யாப்பென்பதாயிற்று. ஆகவே, ஐந்ததிகாரங்களும்
தம்முள் ஒன்றையொன்று இன்றியமையாவெனக் கொள்க.

     வ - று. “கங்க னகன்மார்பன் கற்றோர்க் கினிதளிக்கும், 3செங் கனக வெள்ளைச்
செழுமணிகள் - எங்கும், தெறித்தனவே போல்விளங்கு 4மீன்சூழ்ந்த திங்கள்,
எறிக்குநிலா வன்றோ வினி” எனவரும்.

     (பி - ம்) 1ஏனைவினைச்சொற்களும் 2தொகைநிலைத் தொடர்மொழிகளும்3
செங்கனகம் 4 மீன்சூழத்

(11)

 

(268)

ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே
முதறொகை குறிப்போ டின்ன பிறவும்
குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை.

     எ - ன், மேல் ‘வெளிப்படைகுறிப்பு’ என்றார், அவை இவையென்பது
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இருதிணையிடத்தும் ஆண்பால் பெண்பால்களுள்
ஒன்றனையொழித்துநிற்கும் பொதுச்சொல்லும், தலைக்குறைத்தல் முதலான ஒன்பது
விகாரச்சொற்களும், மூவகைத் தகுதிவழக்கு மொழிகளும், ஆகுபெயர்ச் சொற்களும்,
அன்மொழித்தொகைச்சொற்களும்,