வினைக்குறிப்புமொழிகளும் முதல்நிற்கும் 1எழுத்து மாத்திரமும்மொழிமாத்திரமுங்காட்டி நிற்கு மொழிகளும், பொருட்டொகையைத்தோற்றிநிற்குமொழிகளும், குறிப்பாய் வருமொழிகளுடன் இவைபோல்வனபிறவும்குறிப்பினாற் பொருளைக்காட்டு மொழிகளாம். இவ்வாறன்றி வருவனவெல்லாம்விளங்கிநின்று பொருளைக் காட்டும் மொழிகளாம் எ - று.
வ -று. வடுகரசர் ஆயிரமக்களையுடையார்; ஆயிரம் யானைகளையுடையார் எ-ம், 2பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்களுளர், நம்பி3நூறெருமையையுடையன் எ - ம் பெயர்கள் குறிப்பினான் இருதிணைப்பெண்ணையும் ஆணையும் ஒழித்தன. கருவூரார் நிரைகொண்டார், இன்று இவ்வூர்ப்பெற்றமெல்லாம் உழவொழிந்தன எ - ம், மருவூரார் 4தைந்நீராடினார், இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் 5அறத்திற்குக்கறக்கும் எ - ம் வினைச்சொற்கள் குறிப்பினான் இருதிணைப்பெண்ணையும் ஆணையு மொழித்தன. பிறவுமன்ன.
“மரைமலர் குலிகமொ டிகலிய வங்கை”, “ஆடிப் பாவை போல, 6மேவின செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே” (குறுந். 8), “வறிதுநிலைஇய காயமும்” (புறநா. 30) என இவை முதற்குறைந்தும் தாமரைமலர், இங்கு லிகம், கண்ணாடி, ஆகாயமெனக் குறிப்பினான் அறியவந்தன. “வேனி 7லோதிப்பாடுநடை” (நற். 92), “எல்லாவிஃதொத்தன்” (கலி. 61) என இவை இடைக்குறைந்தும் 8ஓத்தி ஒருத்தனென்று குறிப்பினான் அறிய வந்தன. “நீனிறப் பெருங்கடல்” (அகநா. 40) “தாமரை, முளை 9நிவந் தவைபோலு முத்துக்கோ லவிர்தொடி” (கலி. 59) என இவை கடைக் குறைந்தும் நீலம், கோலமெனக் குறிப்பினான் அறியவந்தன. பிறவுமன்ன.
மூவகைத் 10தகுதிவழக்கிற்கு மேற்காட்டினவே கொள்க.
கடுத்தின்றார், புளித்தின்றார், தெங்குதின்றார் என இவ்வாகுபெயர்கள் குறிப்பினான் இவற்றின் காய்தின்றாரென அறியவந்தன.
“பொற்றொடி தந்த புனைமடல்” (இ - வி. சூ. 54, 170 - உரை), “அறற் கூந்தற் கில்லை யருள்” (இ - வி. சூ. 170 - உரை) என இவ்வன்மொழித்தொகை, பொற்றொடிமேலும் அறற்கூந்தன்மேலும் செல்லாது குறிப்பினான் இவற்றையுடையாரை அறியவந்தன.
குழையன், பொன்னன், நிலத்தன், மூவாட்டையான், 11மார்பன், கரியன், ஊணன், அல்லன், இல்லன், வல்லன், நல்லன், தீயன், அணியன், வடாதுவேங்கடம், “தெனாது.......குமரி” (புறநா. 6) என்னும் குறிப்பு வினைச்சொற்கள் குறிப்பினானன்றி வினையறியலாகாமையின் வினைக்குறிப்புமொழிகள்.
“குன்றா விளையு ளுயர்நிலந் துன்புற்றுத், தாவென் றிரப்பாடன் கை” என்னுமிதனுள், ‘குன்றா’ என்புழிக் குரல் நரம்பும், ‘வினையுள்’ என்புழி விளரிநரம்பும், ‘உயர்நிலம் என்புழி உழைநரம்பும், ‘துன்புற்று’ என்புழித் துத்தநரம்பும், ‘தாவென்று’ என்புழித் தாரநரம்பும், ‘இரப்பாள்’ என்புழி இளிநரம்பும், ‘கை’ என்புழிக் கைக்கிளைநரம்புமென்பன குறிப்பான் | |
|
|