124

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
முதனின்ற எழுத்தான் அறியவந்தன. “இல்லென்பான் கையிற் *12குடாஅ
விரகிலிக், குள்ளதென் றுய்ப்பதென் றான்”. இதுவுமது. “ஓங்கெழின் முதலாக், குன்று
கூதிர் பண்பு தோழி, விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாம், தெளிய வந்த
செந்துறைச் செந்துறை” என்னுமிதனுள், ‘ஓங்கெழில்’ என்புழி, “ஓங்கெழி லகல்கதிர்
பிதிர்துணி மணிவிழ முந்நீர் விசும்பொடு 13பொருதலற” என்னும் பாட்டும், ‘குன்று’
என்புழி, “குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான்” என்னும் பாட்டும், ‘கூதிர்’
என்புழி, “கூதிர்கொண்டிருடூங்கும்” என்னும் பாட்டும், ‘பண்பு’ என்புழி, “பண்பு கொள்
செயன்மாலை” என்னும் பாட்டும், ‘தோழி’ என்புழி, “தோழி வாழி தோழி வாழி, வேழ
மேறி வென்ற தன்றியும்” என்னும் பாட்டும், ‘விளியிசை’ என்புழி, “விளியிசைப்ப
விண்ணகநடுங்க” என்னும் பாட்டும், ‘முத்துறழ்’ என்புழி, “முத்துற ழகலந்தேங்கி”
என்னும் பாட்டும் குறிப்பினான் 14முதனின்றமொழியான் அறியவந்தன. பிறவுமன்ன.

      “ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால், வென்று களங் கொண்ட
வேல்வேந்தே - சென்றுலா, மாழ்கடல்சூழ் வையகத்து ளைந்துவென் றாறகற்றி;
யேழ்கடிந் தின்புற்15றிரு (பு. வெ. 9 : 37) [ஒன்று - ஞானம்; இரண்டு - தானும்
தலைவனும்; மூன்று - காம வெகுளி மயக்கம்; நான்கு - சதுரங்கசேனை; ஐந்து -
பஞ்சேந்திரியம்; ஆறு - காமக்குரோத லோப மோக மத மாற்சரியம்; ஏழ் -
பிறப்பேழு], “அலங்குளைப் புரவியைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட” (புறநா.
2.) [ஐவர் - பாண்டவர்] என்னும் இவை குறிப்பினால் தொகைப்பொருள் அறியவந்தன.

      “உவர்க்கட லன்ன செல்வரு முளரே (உலோபர்), கிணற்றூற் றன்ன நீயுமா
ருளையே, 16செல்வர்தாம் பெருந்திரு வுறுக பல்பகல், 17நீவா ழியரோ நெடிதே 18ஈயாச்,
சிறுவிலைக் 19காலத் தானும், உறுபொரு டந்தெஞ் சொற்கொள் வோயே” (உதாரர்.)
“பலசான் றீரே பலசான் றீரே, கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட், பயனின்
மூப்பிற் பலசான்றீரே” (புறநா. 195), “அறனோ மற்றிது விறன்மாண் குடுமி, இன்னா
வாகப் பிறர்மண்கொண், டினிய செய்திநின் 20னார்வலர் முகத்தே” (புறநா. 12), “நீயுந்
தவறிலை நின்னைப் புறங்கடைப், போதர விட்ட நுமருந் தவறிலர், நிறையழி
கொல்யானை நீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்க வென்னா, இறையே
தவறுடை யான்” (கலி. 56), 21எனவும், ‘நீயிர் பெரிதுமறிதிர்’ எனவும், 22 ‘கற்கறித்து
நன்கட்டாய்’ எனவும் வருமிவை சொல்லுவான் குறிப்பினாற் பொருளறியவந்தன.

     இனி, இன்னபிறவும், என்றதனால், “கோடாப் புகழ்மாறன்கூட லனையாளை, ஆடா
வடகினுளுங் காணேன்போர் - வாடாக், கருங்கொல்வேன் மன்னர் 23கலம்புக்க
கொல்லோ, மருங்குல்கொம் பன்னாண் மயிர்”
     (திணைமா. 4), “மையார் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு, கையார் பிரிவித்தல்
காண்” (திணைமா. 5), “அற்ற மின்றி நின்றசீ

     * ‘குடா’ என்பதற்கு இங்கே கொடாவென்று பொருள்கொள்க; உகர ஒகரங்கள்
சிலவிடத்து