ரழற்பெயர்ப் புணர்ச்சியான், முற்றுமுன் சடிப்பெயர் மூன்றுலகு மான்றெழ” (சூளா. இரத. 19), “அன்ன மனையா (ரயகண்டன் றேவிமார்” (சூளா. அரசியற், 339) என இவ்வாறு வருவனவும், “சோலையை யோரெழுத்தா லென்சொல்லுந் தொக்கதன்மேல், நீலப்பே ரெவ்வெழுத்தி னானிரம்பு - மாலைக், குடைவேந்தன் சென்னி குலநதி யின் பேரைக், கடைசேர்ந்த வோரெழுத்தாற் காண்” (கா, காவி, காவிரி) என இவ்வாறு எழுத்துப்பெருக்கமாய் வருவனவும், “ஆற்றின்பேரீற்றி னெழுத்தொழிய வின்பஞ்சேர், நாற்கால தாமீற் றுயிர்நடப்ப - வேற்புடைய, உண்பயனா மாங்கதனி னீறொழிந்தா லோதுநூற், *கின்பஞ்சேர் செய்யுளா மின்று” (பாலாறு, பாலா, பால், பா) இவ்வாறு எழுத்துச் சுருக்கமாய் வருவனவும், “வாம மணிமே கலையார் மயிர்குறுகி, னாமவர் பெய்யு மணிகுழை - ஏம, மயிர்நிறுவி மற்றதற்கோர் புள்ளி கொடுப்பிற், செயிர்தீர் மரமாகுஞ் சென்று” (கூழை, குழை; ஓதி, ஒதி) இவ்வாறு மாத்திரைச்சுருக்கமாய் வருவனவும், “பூமேலா ளாரென்பார் பூம்போர்வை யென்செய்யும், தீமேற் படிற்கொடுத்தாற் கொள்வதெவ - னாமே, நலந் திகழுந் செங்கோ னயதீர னெங்கோன், சிலம்பன் றிருவேங்24கடன்” இவ்வாறு வினாவுத்தரமாய்வருவனவும், “நீத்தொழிந்த வாறைந் தடக்கிபின் னிச்சயமே; வாய்த்தமைந்த வாயில்பெண்ணானையும் - கூத்தற்கு, வாளேறோ டோசை விளைநில மிவ்வல்லாற், கேளா யுடன் வருவதில்” (நிலையாமை கடைப்பிடி; புண்ணியஞ்செய்), “எழுதுவரிக் கோலத்தா ரீவாற் குரியார், 25தொழுதிமையார் கண்ணமைந்த தோட்டார். 26பழுதகல, நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும், பேணற் கமைந்தார்பெரிது” (பொத்தகம்) [தொல். சொல். 449. சே. உரை] இவ்வாறு பிரேளிகையாய் வருவனவும் 27யூகிப்பயிற்சொல்லாய்வருவனவும் இன்னபிறவும் குறிப்பாற் பொருளுணர்த்துவனவாமெனக்கொள்க.
இவ்வாறன்றி, உயிர் உணர்வு உடம்பு தலை கண் செவி வாய் மூக்கு கை கால் சோறு கூழ் பால் பாகு பாளிதம் 28பொன் மணி முத்து நிலம் நீர் மரம் கமுகு தெங்கு யானை குதிரை ஒன்று இரண்டு கழஞ்சு துலாம் நாழி குறுணி கலமெனவும், “நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும், கொல்லாமை சூழு நெறி” (குறள். 324), “ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற், கெழுமையு மேமாப் புடைத்து” (குறள். 398) எனவும் இப் பெற்றிச்செப்பத்தாற் பொருள்தருவனவெல்லாம் வெளிப்படையெனக் கொள்க.
(பி - ம்.) 1எழுத்துமாத்திரங்காட்டிநிற்கு மொழிகளும், மொழிமாத் திரங்காட்டிநிற்கு மொழிகளும் 2 அரசன் பெருந் 3 நூற்றெருமை, 4 (1) சித்திரைநீர், (2) ஆதிரைநீர்5 அறத்திற்கே 6 (1) மேவனசெய்யுந், (2) ஏவினசெய்யுந் 7 ஒத்தி 8 ஒருத்தி 9 (1) நிமிர்ந்தவை, (2) நிவந்தன 10 தகுதிக்கு 11 கண்ணன் 12 கொடாஅ 13 பொருதெழ 14 முன்னின்ற15 றியல் * அழற்பெயர்ப் புணர்ச்சியான் முற்றுமுன்சடிப்பெயர் - ஜ்வலனஜடியென்பது. ( அயகண்டன். | |
|
|