126 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | 16 செல்வர்தம் 17 நீவாழியவே 18 அயாஅச் 19 காலத்தாயினும் 20 நாவலர் 21 இதற்குத்துறை பாங்கி களிற்றிடை யுதவிக்கறத் தொடுநிற்றலெனவும் 22 (1) கற்கறித்துங்கறிநன்கு (2) கற்கறித்துக் கறி 25 களம் 24 கடம் 25 தொழுதிமைக்கண்ணணைந்த 26 முழுதகலா 27 யூகிப்பயிர்ச்சொல்28 பொன்கமுகு | (12) | | (269) | அதுவே, இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர்வினை எனவிரண் டாகு மிடையுரி யடுத்து நான்குமாந் திசைவட சொல்லணு காவழி. | எ - ன், மேல் அவ்வாற்றாற்பகுத்தசொல் இவ்வாற்றான் இத்துணையா மென்பதுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேற்கூறப்பட்ட சொல்லே, இயற்சொல் திரிசொல்லென் னும் கூறுபாட்டான் வருவனவான பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லு மென 1 இரண்டாம்; இடைச்சொல்லும் உரிச்சொல்லுமென்னும் இவ் விரண்டுங்கூட நான்கு கூறுபாட்டதாம்; திசைச்சொல்லும் வடசொல்லும் கூடாதவிடத்து எ - று.
இதனாற்போந்தபொருள், 2பெயரியற்சொல், பெயர்த்திரிசொல், வினையியற்சொல், வினைத்திரிசொல், இடையியற்சொல், இடைத்திரிசொல், உரியியற்சொல், உரித்திரிசொல்லென எண்வகைத்தாம், தமிழ்நாட்டிற்குரிய சொல்லென்றவாறு.
‘நான்குமாம்’ என்ற உம்மையான், அவையும் இயற்சொற் றிரிசொல் லாகியும் அவற்றுட் சிலஇடைச்சொல் பெயர்வினைகளாகியும் உரிச்சொல்லுட்சில வினையாகியும் பெயராகியும் வருவன உளவெனக் கொள்க. அஃதேல், பெயர்வினையிடையுரி நான்காகுமென்று ஒன்றாக வோதலமையும் பிறவெனின், அவை பெயர்வினைபோல இலக்கணமுற்றும் ஒரு தலையாக வேற்றுத் திணைபாலிடங்களை விளக்கித் தனித்து நடவாவாகலின் வேறோதல் வேண்டுமென்க.
மற்று, மற்றை, பிற என்றற்றொடக்கத்தன பெயரிடைச்சொல்; போல, புரைய, ஒப்ப, உறழ என்றற்றொடக்கத்தன வினையிடைச் சொல்; சால, உறு, தவ, நனி, கழி என்றற்றொடக்கத்தன உரிச்சொற்கள்.
‘திசைவடசொல்லணுகாவழி’ எனவே இப்பகுதிப்படுவது தமிழ்நாட் டிற்குரிய சொல்லென்பதூஉம், திசைச்சொல்லும் வடசொல்லும் ஈண்டுச் சேரவும் பெறுமென்பதூஉம், சேர்தல் ஒருதலையன்மையின் அவற்றிற்கு இலக்கணம் ஈண்டுக் 3கூறாரென்பதூஉமாயிற்று.
4இனி, இவ்வெட்டனுட் பெயர்ச்சொல்லிரண்டையும் ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழியான மூன்றினானும் உறழ ஆறாம்; அவற்றை இருதிணையும் பொதுவுமான மூன்றினானும் முரணப் பதினெட்டாம்; அவற்றை ஐம்பாலும் பொதுவுமான ஆறானுமாற நூற்றெட்டாம்; அவற்றை மூன்றிடத்தானும் பெருக்க, | |
|
|