1. - பெயரியல்

127

   
முந்நூற்றிருபத்துநாலாம்; அவற்றை இடுகுறி முதல் நான்கினானும் 4தாக்க
ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூற்றாறாம்; அவற்றைப் பொருளாதியாறினாலும்பொர
ஏழாயிரத்தெழுநூற்றெழுபத்தாறாம். வினைச்சொல்லையும் இவ்வாறே
முந்நூற்றிருபத்துநான்களவும் பெருக்கி அவற்றை இருமுற்றீரெச்சங்களான
நான்கினானும்பெருக்க ஆயி ரத்திருநூற்றுத் தொண்ணூற்றாறாம்.
இடைச்சொல்லிரண்டையும் இடைச் சொல், பெயரிடைச்சொல், வினையிடைச்சொல்லான
மூன்றானுமுழற ஆறாம். உரிச்சொல்லிரண்டையும் வினைச்சொல், இயற்குணப்பெயர்,
தொழிற்குணப்பெயரென்னும் மூன்றினானுமுறழ ஆறாம். ஆக நால்வகைத்
தமிழ்மொழிவிரிஎண் ஒன்பதினாயிரத்தெண்பத்துநாலாம். இவ்வாறன்றிப்
பிறவாற்றானும்பெருக்கப் பெரிதும் பலவாம். இவ்வாறுபெருக்கினாலும் ஏற்குமாறு
அறிந்துகொள்க.

     (பி - ம்.) 1 இரண்டாய்இடைச் 2 பெயரியற்சொல்லும்.......உரித்திரி சொல்லுமென
3கூறாமென்பதூஉம் 4இவ்வெட்டனுள் 5 (1) பெருக்க;(2) மாற

(13)

 

(270)

செந்தமி ழாகித் திரியா தியார்க்கும்
தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல்.

     எ - ன், மேல், “இயற்சொல்” என்றார், அஃது இஃதென்பதுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) செந்தமிழ்நிலத்து மொழியாய்ச் சொல்லானும்பொருளா னும் திரிபின்றிக்
கற்றார்க்கும் கல்லாதார்க்குமொப்பத் தம்பொருள்விளக்கும் இயல்பினையுடையன
இயற்சொல்லாவன எ - று.

     வ - று. அவன், அவள், மகன், மகள், மக்கள், மாந்தர், உடம்பு, உறுப்பு, பொன்,
மணி, முத்து, மாலை, மணல், நீர், நெருப்பு, காற்று, சோறு, புடைவை, யானை, குதிரை,
மயில், குயில், மா, பலா, தெங்கு, கமுகு எ - ம், நிலம், மண், தறை, மேடு, பள்ளம்,
குளம், குழி, யாறு, கடல் எ - ம், யாண்டு, பருவம், திங்கள், இன்று, நாளை, இரா, பகல்
எ - ம், தலை, முகம், கண், காது, கை, கால், கொம்பு, கொழுந்து, இலை, பூ, காய்,
பழம், வேர் எ - ம், உணர்வு, ஒளி, கறுப்பு, சிவப்பு, வட்டம், சதுரம், வெம்மை,
தண்மை, கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, 1உவர்ப்பு, உறைப்பு, ஒப்பு, பொலிவு எ - ம்,
நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல், ஓடல், பாடல், கொள்ளல், கொடுத்தல் எ - ம்
2பொருளாதியாறு பொருளையும் பெயரியற்சொல் விளக்கினவாறு. உண்டான்,
உறங்கினான், நின்றான், நினைந்தான், எழுதினான், ஓதினான், பார்த்தான், பழித்தான்,
வந்தான், போனான், என வினையியற்சொல் வந்தவாறு. மற்று, மற்றை, பிற என
இடையியற்சொல்வந்தவாறு. குழக்கன்று (நாலடி. 101), உப்புக்கூர்த்தது, 3அலமந்து
திரியாநின்றான், அதிர்ந்திருந்தான், நோய்தீர்ந்தது என உரியியற்சொல் வந்தவாறு.
பிறவும் இவ்வாறேவழங்குமியற் சொற்களெல்லாம் ஆராய்ந்துகொள்க.