128

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (பி - ம்.) 1 கூர்ப்பு, காழ்ப்பு, தித்திப்பு 2 பொருளாதியாறும் பெயரியற்சொல்3
அலந்து

(14)

 

(271)

ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த வொருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்.

     எ - ன், மேல்நிறுத்தமுறையானே திரிசொல்லாவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒருபொருளைக்கருதிய பலசொல்லாகியும், பலபொருளைக் கருதிய
ஒருசொல்லாகியும், கல்லாதார்க்கு அறியலாகாப் பொருளவாவன 1திரிசொல் எ - று.

     இச்சொல்லிற்கு வேறோர்இயற்சொற் கொடுவந்து திரித்துச் சொல்ல வேண்டுதலால்,
திரிசொல்லெனக்கொள்க. இதற்குப் பிறவாறு சொல்லுவாருமுளர்.

     வ - று. வெற்பு, விலங்கல், விண்டு, அடுக்கல், பொற்றை, பொருப்பு, பொறை,
அறை, நவிரம், குன்று, குவடு, வரை, சிலம்பு, ஓங்கல் எ - ம், படி, பார், புடவி,
பொழில், இடம் எ - ம், எல்லி, கங்குல், அல்கல், அல் எ - ம், கொங்கை, குரூக்கண்,
குயம், வல்லுஎ - ம், சுணங்கு, துத்தி, உத்தி, திதலை, தொய்யில் எ - ம், துய்த்தல்,
மிசைதல், நுகர்தல், அயிறல் எ - ம் இவை முறையே பொருளாதியாறனுள்,
ஒருபொருள்கருதிய பல பெயர்த்திரிசொல். இயங்கினான், ஏகினான் எனவிவை
ஒருதொழில்குறித்த பலவினைத்திரிசொல். சாத்தனே, வந்தாயே; கூத்தனோ, வந்தாயோ

     எ - ம், “ஓஒ 2வுவம னுறழ்வின்றி யொத்ததே” (களவழி. 36), “குறவரு மருளுங்
குன்றம்” (மலைபடு. 275), எ - ம் வருமிவை வினா ஒருமையினும் உயர்வு
சிறப்பொருமையினும் வந்த பலவிடைத்திரிசொல். உறு, தவ, நனி, கழி எனுமிவை
மிகுதியொருமையைத்தழுவிய பல உரித்திரிசொல். பிறவுமன்ன.

     இனிப் பலபொருள்குறித்த ஒருபெயர்த்திரிசொல் வருமாறு: உந்தி, ஓடை, நறவம்,
வாரணம் என்றற்றொடக்கத்தன. இவற்றுள், உந்தியென்பது கொப்பூழினையும்
ஆற்றிடைக்குறையினையும் தேர்த்தட்டினையும் யாழ்ப் பத்தற்றுளையினையுமுணர்த்தும்.
ஓடையென்பது யானைப்பட்டத்தினையும் ஒருமரத்தினையும் ஒருகொடியினையும்
நீர்நிலையினையு முணர்த்தும். 3நறவமென்பது கள்ளினையும் ஒருகொடியினையு
முணர்த்தும். வாரணமென்பது கோழியினையும், பன்றியினையும், யானையினையும்,
சங்கினையுமுணர்த்தும். துஞ்சினார், ஒதுங்கினார், மாண்டது என்றற்றொடக்கத்தன,
பலதொழில் குறித்த ஒரு தொழிற்றிரிசொல்; இவற்றுள், துஞ்சினாரென்பது உறங்கினா
ரென்பதனையும் இறந்தாரென்பதனையு முணர்த்தும். ஒதுங்கினாரென்பது
நடந்தாரென்பதனையும் ஒடுங்கினாரென்பதனையும் உணர்த்தும். மாண்டதென்பது
மாட்சிமைப்பட்ட தென்பதனையும் மாய்ந்ததென்பதனையும் உணர்த்தும். பிறவுமன்ன.
தில், மன், மற்று, கொல் என்றற்றொடக்கத்தன பலபொருள்