1. - பெயரியல்

129

   
     கருதிய ஓரிடைத்திரிசொல். ‘கடியென்கிளவி’ முதலாயின பலகுணந் தழுவிய
ஓருரித்திரிசொல். பிறவுமன்ன.

     (பி - ம்.) 1 திரிசொல்லாவன 2 உவமை 3 நறவென்பது

(15)

 

(272)

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.

     எ - ன், மேல் நிறுத்தமுறையானே, முன்னின்ற இயற்சொல்லும்
திரிசொல்லுமுணர்த்தி, அவற்றின்பகுதியாய் இடையில் நின்றவற்றைத்
தத்தமோத்துக்களுள் உணர்த்தியநிறீஇ எஞ்சியவிரண்டினுள் திசைச் சொல்லாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிருநிலத்தினும் இரு வகைத்தமிழாம்
ஒருமொழிநிலத்தையொழிந்த பதினேழ்நிலத்தினும் தத்தங் குறிப்பினான்
வழங்குவனவற்றைத் திசைச்சொல்லென்று சொல்லுவர், ஆசிரியர் எ - று.

     செந்தமிழ்நிலமும் அதனைச்சேர்ந்த பன்னிருநிலமும் மற்றைப் பதினேழ்நிலமுமாக
நிலம் முப்பதாம் பிறவெனின், ஆகாது; பதினெண்பூமி பதினெண்மொழியென்றே
உலகத்து வழங்கிவருதலின். அவற்றுள், ஈண்டொழித்த தமிழொன்றே
இப்பதின்மூன்றுபாலும் பட்ட 1தென்க. அவற்றுள்ளும் ஒன்று செந்தமிழென்றும் அல்லன
கொடுந்தமிழென்றும் கூறப்படும். அவற்றுள், செந்தமிழ்நிலம், கருவூரின்கிழக்கும்
மருவூரின்மேற்கும் வையையாற்றின்2வடக்கும் மருதயாற்றின் 3தெற்குமாம்.
கொடுந்தமிழ்நிலம், அதனைச்சூழ்ந்த, “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா 4வேள்பூழி,
பன்றி 5யருவா ளதன்வடக்கு - நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்,
ஏதமில்சீர்ப் பன்னிருநாட் டெண்” என்னும் இப்பன்னிருநாடுமாம். அவற்றுள்,
தென்பாண்டிநாட்டார் ஆவினைப் பெற்றமென்றும் சோற்றினைச் சொன்றியென்றும்,
குட்டநாட்டார் தாயைத் தள்ளையென்றும், குடநாட்டார் தந்தையை அச்சனென்றும்,
கற்காநாட்டார் வஞ்சரைக் கையரென்றும், வேணாட்டார் தோட்டத்தைக் 6கிழாரென்றும்,
பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழியென்றும், பன்றிநாட்டார் செறுவைச் செய்யென்றும்,
7அருவாணாட்டார் சிறுகுளத்தைக் கேணியென்றும், 8அருவாள்வடதலையார் புளியை
எகினமென்றும், சீதநாட்டார் தோழனை எலுவனென்றும், 9மலாட்டார் தோழியை
இகுளையென்றும், புனனாட்டார் தாயை ஆயென்றும் வழங்குவர். பிறவும்
அறிந்துகொள்க.

     தமிழொழி பதினேழ்நிலமாவன: “சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந்
துளுக்குடகம், கொங்கணங் கன்னடங் கொல்லந் 10தெலிங்கம் கலிங்கம் வங்கம், கங்க
மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம், தங்கும் 11 புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்நிலந்
தாமிவையே” என்பன. ‘அருமணம் 12 காம்போசம் ஈழம் கூவிளம் 13 பல்லவமங்கம்’
என்பன முதலானவை, இவற்றின்பாரியாயமும் இவற்றின்பேதமுமாய் இவற்றுள்ளே
அடங்குமென்க. இவற்றின்மொழிகளும் வந்த வழி அறிந்துகொள்க;