நூற்பெயர்வகை |
| (48) | முதனூல் கருத்த னளவு மிகுதி பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும் இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. |
(இ - ள்.) இவ்வெட்டனுள் ஒன்றுபற்றிவரும் நூற்குப்பெயர் எ-று. அவற்றுள், முதனூலாற்பெயர்பெற்றன 1ஆரியபடலம், பாரத முதலாயின. கருத்தனாற் பெயர்பெற்றன அகத்தியம், தொல்காப்பிய முதலாயின, அளவினாற் பெயர்பெற்றனபன்னிருபடலம், *நாலடி நானூறு முதலாயின. மிகுதியாற்பெயர்பெற்றன (களவியல் முதலாயின. பொருளாற் பெயர் பெற்றன அகநானூறு, புறநானூறு முதலாயின. செய்வித்தோனாற் பெயர் பெற்றன சாதவாகனம், இளந்திரைய முதலாயின. தன்மையாற்பெயர்பெற்றன சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் முதலாயின. இடுகுறியாற்பெயர் பெற்றன2நிகண்டு நூல், கலைக்கோட்டுத்தண்டு முதலாயின.) (பி - ம்.) 1ஆரியப்படலம், 2நிகண்டுநூறலைக்கோட்டுத்தண்டு. |
(48) |
நூல்யாப்பு |
| (49) | தொகுத்தல் விரித்த றொகைவிரி 1மொழிபெயர்ப் பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. |
(இ - ள்.) நூலியாப்பு இந்நாற்கூற்றதாம் எ - று. (பி - ம்.) 1 மொழிப்பெயர்ப்பு |
(49) |
| | |
சிறப்புப்பாயிரம் செய்தற்குரியோர் |
| (50) | தன்னா சிரியன் றன்னொடு கற்றோன் தன்மா ணாக்கன் றகுமுரை காரனென் றின்னோர் பாயிர மியம்புத 1லியல்பே. |
(இ - ள்.) இவருள் ஒருவர் பாயிரம் 2சொல்லுதலியல்பு எ - று. (பி - ம்.) 1 கடனே 2 செய்தல் |
|
* நாலடியார்; நாலடி நானூறென்னும் பெயர், யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றிலும் காணப்படுகின்றது.( இறையனாரகப்பொருள். ( செய்தானாற்பெயர்பெற்றன: அகத்தியம். தொல்காப்பியமென இவை; செய்வித்தோனாற்பெயர்பெற்றன சாதவாகனம், இளந்திரையமென இவை; இடுகுறியாற்பெயர்பெற்றன நிகண்டு, கலைக்கோட்டுத்தண்டென இவை; அளவினாற்பெயர்பெற்றது பன்னிருபடலமென்பது; சிறப்பினாற்பெயர்பெற்றது களவியலென்பது (இறை. 1 - சூ. உரை). |