130 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | “கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம், சிங்களங் 14கொல்லங் கூவிள மென்னும், எல்லையின் புறத்தவு மீழம் பல்லவம், கன்னடம் வடுகு கலிங்கந் தெலிங்கம், கொங்கணந் துளுவங் குடகங் குன்றம், என்பன குடபா லிருபுறச் சையத், 15 துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும், முடியுடை மூவரு மிடுநில வாட்சி, 16அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள், பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த, பன்னிரு திசையிற் சொன்னய முடையவும்” என்றார் அகத்தியனார்.
(பி - ம்.) 1 தென்றும் அவற்றுள்ளும் 2 தெற்கும் 3 வடக்கும்4 வேண் 5 யருவாவதன் 6 கிழவென்றும் 7 அருவாநாட்டார் 8 அருவாவடதலையார் 9 (1) மலாடர், (2) மலாடுநாட்டார், (3) மலையமானாட்டார் 10 தெலுங்குவங்கங்கலிங்கம் 11 தமிழ்ப்புவி சூழ்12 காம்போதியீழம் 13 பல்லவம்வங்கம் 14 கொல்லமென்னும்15 துடனுறைபுறழபழகுந் 16 ஆட்சியாகமெயப்பட்ட | (14) | | (273) | பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானு மியைவன வடசொல். | எ - ன், நிறுத்தமுறையானே வடமொழியாவன உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்தானும் ஆரியத்திற்கேயுரிய எழுத்தானும் 1 இவ்விரண்டெழுத்தானும் நடப்பனவாம், ஆரியச்சொற்கள் எ - று.
வ - று. அமலம், இராகம், உபமம், ஏகம், ஓது (பூனை); கமலம், கீர்த்தி, குங்குமம், 2கோபம்; சரணம், சிக்கணம், சஞ்சு (பறவையின்மூக்கு), சௌளம்; ஞானம், ஞேயம்; 3இடங்கணம்; தமாலம், தாரம், திலகம், தீரம்; நாமம், நீலம், நூனம்; பானம், பீனம், புராணம்; மனம், மானம், மீனம், மூலம், மௌனம்; யானம், யூபம், யோகினி, யௌவனம்; இராவணன், உரூபம், உரோமம்; இலிபி, உலூதம், இலேபம், உலோபம்; வாரம், வீரம், வேணு, வைரம் என்றற்றொடக்கத்தன பொதுவெழுத்தான் வருவன. கந்தம், சேதம், சதம், 4இட்டம், திண்டிமம், தீர்க்கம், போதம், போகம், சத்தம், சட்டம், சுகம், சிங்கம், குதை என்றற்றொடக்கத்தன ஆரியத்திற்கேயுரிய எழுத்தான் வருவன. அரன் அரி, அயன் 5அருகன்; கடினம், குரகம், கீதம், கனம்; சண்டம், சலம், சாதி, சச்சரை; துரங்கம், தூலம், தூரம், துரை; பாடம், பலம், பேரம், பூதம்; மோகம்; யாகம், இராகம்; வந்தனை; சூலம்; நட்டம்; ஆரம்; சோமன், தூளி; பக்கம் என்றற்றொடக்கத்தன பொதுவும் சிறப்புமான ஈரெழுத்தானும் வருவன.
இஃது, ஒரு நிலத்திற்கேயுரியதன்றிப் பதினெண் பூமிக்கும் விண்ணிற்கும் புவனாதிகட்கும் பொதுவாய்வருதலின், திசைச்சொல்லின் அடக்காது வேறோதினாரென்க. 6அஃதென்னை? வடக்கண்மொழியென்றாராலோவெனின், ஆண்டு வழக்குப்பயிற்சியை நோக்கி அவ்வாறு கூறினாரென்க. | |
|
|